Jerusalem Shooting : இஸ்ரேலின் ஜெருசலேமில் மதவழிபாட்டு தலம் அருகே நடத்தப்பட்ட பயங்கர வாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


தாக்குதல்


இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில்  வழிபாட்டு தளம் அருகே இன்று துப்பாக்கிச் நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேலியர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 






துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதியான பியட் ஹனியா பகுதிக்குள் தப்பிச் செல்ல முயன்றார். 7 பேரை சுட்டு வீழ்த்திவிட்டு அரை கிலோ மீட்டர் சென்ற நிலையில், அந்த பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.


பதற்றம்


இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததை அடுத்து, அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல்-மேற்குகரை இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில்  ஜெருசலேமில் அல் அக்ஸா பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தின. பல மாதங்களுக்கு பிறகு இது போன்ற தாக்குதல் நடைபெற்றது, மீண்டும் பதற்றத்தை கிளப்பி உள்ளது.


பட்டாசு வெடித்து கொண்டாட்டம்






இஸ்ரேலில் சமீபத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. ஜெருசலேத்தில் நடத்த துப்பாக்கிச் சுட்டுக்கு இஸ்ரேல் பதிலளடி கொடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து, மேற்குகரை, காசா முனை பாலஸ்தீனியர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Watch Video: நான் இருக்கப்பவே விமர்சனமா..? சாமியாரிடம் மைக்கை பறித்த முதலமைச்சர் - வைரலாகும் வீடியோ..!


Budget 2023: விவசாயம் முதல் கிரிப்டோ வரை... மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள மத்திய பட்ஜெட்..!