ஜப்பானில் 4.60 லட்சம் மக்களின் டேட்டாக்களை ஊழியர் ஒருவர் தொலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று இன்று வரை உருமாறி வருகிறதே தவிர முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்த தொற்று மனித உயிர்கள், பொருளாதாரத்தில் பல இழப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். 


அதேசமயம் மக்களின் துயரைப் போக்க அரசும் நிவாரணத் தொகையை வழங்கியது. அந்த வகையில் மேற்கு ஜப்பானில் உள்ள அமகாசாகியில் உள்ள வீடுகளில் கொரோனா நிவாரணத் தொகைகள் வழங்குவதை மேற்பார்வையிட பெயர் குறிப்பிடாத ஒரு தனியார் ஒப்பந்தக்காரர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். அவர் சில தினங்களுக்கு முன் நகர அலுவலகத்திலிருந்து ஒசாகாவில் உள்ள கால் சென்டருக்கு பொதுமக்களின் தகவல்கள் அடங்கிய டேட்டாவை மாற்ற  மெமரி ஸ்டிக் டிரைவ் ஒன்றில் சேகரித்து எடுத்துச் சென்றுள்ளார்.


பணத்துக்காக 13 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக நடிப்பு! ரூ.6 கோடி அபேஸ் செய்த பெண்!


அன்று மாலை ஒரு மதுபான விடுதியில் சக ஊழியர்களுடன் அமர்ந்து அளவுக்கதிகமாக மது குடித்துள்ளார். பின் தட்டுத் தடுமாறி சுய நினைவின்றி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அடுத்த சில மணி நேரத்தில் தன்னுடைய பையில் மெமரி ஸ்டிக் டிரைவ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 






அந்த ட்ரைவில் 4, 60,000 அமகாசாகி குடியிருப்பாளர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறந்த தேதிகள், வரி செலுத்துதல் மற்றும் குழந்தை நலன்களைப் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் பிற நலத் தொகைகள் ஆகியவை குறியாக்கம் செய்யப்பட்டு கடவுச்சொல் போட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. 


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமகாசாகி அதிகாரி ஒருவர்  பொதுமக்களின் நம்பிக்கையை காயப்படுத்தியதற்கு தாங்கள் மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ட்ரைவ் காணாமல் போனது குறித்து போலீசிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் டேட்டா காணாமல் போனது குறித்த சம்பவம் அமகாசாகி நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண