ஒருவர் எந்த வேலையும் பார்க்காமல் பணம் சம்பாதிக்கிறார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் அப்படி ஒரு நபர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பெரியளவில் தொகை ஈட்டி வருகிறார். அவர் அப்படி என்ன தான் செய்கிறார் தெரியுமா? அவருக்கு எப்படி வேலையை செய்யாமல் பணம் வருகிறது?


ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ(36). 36 வயதான ஷோஜி மோரிமோட்டோ பல்வேறு வேலைகளை செய்யாமல் தவிர்த்து வந்துள்ளார். இவர் ஓட்டல் க்ளினர் வேலை முதல் வார்டு பாய் வரை பல்வேறு வேலைகளை இவரை தேடி வந்துள்ளது. எனினும் அவை எதையும் இவர் தேர்வு செய்யவில்லை. இந்தச் சூழலில் இவர் தினமும் ஒரு கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறார். 


 






அதாவது எந்தவித வேலையையும் செய்யாமல் தனக்கு பிடித்த விஷயத்தை செய்து வருகிறார். அதன்மூலம் இவர் வருமானம் ஈட்டி வருகிறார். இவர் மற்றவர்களுடன் நேரம் செலவிடுவது, அவர்களுக்கு தேவையான உதவியை செய்வது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். அதற்கு முதலில் ஒரு குறைவாக ஒரு தொகையை சேவை கட்டணமாக வசூலித்து வந்தார். அது வேகமாக பிரபலம் அடைய தொடங்கியது. இதன்காரணமாக தற்போது அந்த வேலைக்கு இவர் அதிகமாக வருமானத்தை பெற்று வருகிறார். 


2018ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கை தொடங்கினார். எதுவும் செய்யாத மனிதர் (Do-nothing man) என்ற பட்டத்துடன் இவர் தன்னை ட்விட்டரில் அறிமுகப்படுத்தி தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவரை ட்விட்டரில் மட்டும் 2.5 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அத்துடன் இவர் தன்னுடைய சேவைக்காக 69 பவுண்ட் வரை வசூலித்து வருகிறார். இந்திய மதிப்பில் ஒரு சேவைக்கு 6,641 ரூபாய் வரை இவர் வசூலித்து வருகிறார். ஒரு நாளைக்கு தற்போது சுமார் 3000 அழைப்புகள் இவருக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் இவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும் கணிசமான தொகையை இவர் ஈட்டி சம்பாதித்து வருகிறார். இவரின் நிலையை அறிந்து பலரும் ஆச்சரியம் மற்றும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண