ஜப்பானில் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்களின் உயிரிக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் ” ஜப்பானில் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்களின் உயிரிக்கு ஆபத்து இருக்கிறது. மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும். இந்த நிலநடுக்கம் உடனடியாக ஏற்படாது. அதற்கான சாத்தியக்கூறு இல்லை. ஆனால் 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

சராசரியாக ஒவ்வொரு 100 முதல் 150 வருடங்களுக்கும் இடையே இந்தப் பகுதி பெரிய பூகம்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் வரலாற்று கூற்று சொல்கிறது. நான்கு பெரிய டெக்டோனிக் தகடுகளுக்கு மேல் அமைந்துள்ள ஜப்பான், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இது அத்தகைய அழிவுகரமான நிகழ்வுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது.

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல கட்டிடங்கள் தவிடு பொடியாகின.

கடந்த 2024 ஆம் ஆண்டில், தெற்கு ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 14 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜப்பானின் பசிபிக் கடற்கரையின் பரந்த பகுதிகளில் 323,000 பேர் வரை இறக்க நேரிடும் எனவும் 2 மில்லியனுக்கும் அதிகமான கட்டிடங்கள் அழிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.5 டிரில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மெகாபூகம்பத்தை நாம் நினைவில் வைத்திருப்பது போல, ஜப்பானைத் தாக்கக்கூடிய அடுத்த பெரிய பேரழிவிற்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில், நான்கை பள்ளத்தாக்கில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், சில நிமிடங்களில் 10 மீட்டர் (33 அடி) உயரத்திற்கு சுனாமி ஏற்படக்கூடும் என்று அரசாங்க பேரிடர் தடுப்புக் குழு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.