உலகின் மிக சிறிய ஸ்பூனை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கலைஞர் நவ்ரதன் ப்ரஜபதி. இந்த ஸ்பூன் 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது. அதாவது ஒரு நபரின் விரல் நகத்தைவிட சிறியது இந்த ஸ்பூன்.
இது குறித்து அந்த கலைஞர் நவ்ரதன் ப்ரஜபதி கின்னஸ் உலக சாதனை புத்தக குழுவினரிடம் கூறுகையில், கின்னஸ் உலக சாதனை என்பது சாதனை புத்தகங்களில் கோஹினூர் வைரம் போல் உயர்ந்தது. அதில் இடம்பெற்றதை நினைத்தால் என் தலையில் க்ரீடம் வைக்கப்பட்டது போல் உணர்கிறேன். எதிர்காலத்தில் மினியேச்சர் க்ராஃப்ட் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
நவ்ரதன் ப்ரஜபதி மஹாவீரரரின் மினியேச்சர் சிலை செய்து அதுவும் ஒரு பென்சில் ஊக்கின் முனையில் செய்து தேசிய அளவில் புகழ் பெற்றார். அதேபோல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் சிலையையும் பென்சில் ஊக்கில் மினியேச்சர் சிலையாக வடிவமைத்துள்ளார்.
2006ல் அவர் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். மினியேச்சார் லாந்தர்ன் விளக்கு செய்ததற்காக அவர் அந்த சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். அந்த லாந்தர்ன் விளக்கில் 4, 5 சொட்டு மண்ணெண்ணெய் ஊற்றினால் அது 4 முதல் 5 விநாடிகள் வரை ஒளிரும்.
இப்போது 2023ல் உலகின் மிகச் சிறிய ஸ்பூனை செய்ததற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2021ல் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கவுரிசங்கர் கும்மடிதாலா என்பவர் 4.5 மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஸ்பூனை செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இப்போது உலகின் மிக சிறிய ஸ்பூனை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கலைஞர் நவ்ரதன் ப்ரஜபதி. இந்த ஸ்பூன் 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் (2023 ஜனவரி) ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சத்ய நாராயண் மஹாரானா உலகின் இரண்டு சிறிய ஹாக்கி ஸ்டிக்குகளை உருவாக்கி சாதனை படைத்தார். இவற்றில் ஒரு ஸ்டிக்கின் உயரம் 5 மிமீ. அதன் அகலம் 1 மில்லி மீட்டர். இன்னொரு ஸ்டிக் 1 செமீ உயரம், 1 மில்லி மீட்டர் அகலம் கொண்டது.
16 உலக நாடுகள் கலந்துகொள்ளும் 15 வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் புனேஸ்வர், ரூர்லேகா உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் தான் அந்த கலைஞர் மினியேச்சர் ஹாக்கி ஸ்டிக்ஸ் செய்து கவனம் ஈர்த்தார்.