பிரியாணி, சீன உணவு வகைகள் என தன் மனைவி அளிக்கும் மெனுபடி உணவு சமைத்துக் கொடுத்து அசத்தும் கணவரின் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
காலத்தின் கட்டாயத்தாலோ அல்லது தாங்களாகவே உணர்ந்தோ சென்ற தலைமுறையினரைப் போல் அல்லாமல், இன்றைய மாடர்ன் தலைமுறை தம்பதியினர் வீட்டு வேலைகள் தொடங்கி வேலைக்குச் செல்வது வரை அனைத்தையையும் பகிர்ந்தே செய்து மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றனர்.
அதிலும் இன்றைய தலைமுறை ஆண்கள் சிலர், ஹவுஸ் ஹஸ்பண்ட் பொறுப்பேற்று பல ஆண்டுகால வழக்கங்களை உடைத்து ஜாலியாக இல்லற வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தன் மனைவியை அமர வைத்து அவரிடம் மெனு கேட்டு அவருக்கு விதவிதமாக சமைத்துக் கொடுக்கும் வீடியோ பதிவிடும் நபரின் இன்ஸ்டா பதிவுகள் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
ஆண்டி ஹியர்ன்டென் எனும் இந்நபர் ஒரு தேர்ந்த செஃப் போல் தோற்றமளிப்பதுடன் இந்திய உணவுகள் உள்பட அனைத்து நாட்டு உணவுகளையும் தன் மனையிடம் மெனு கேட்டு சமைத்துக் கொடுத்து அசத்தி வீடியோ பகிர்ந்து வருகிறார்.
முன்னதாக தன் மனைவிக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்திய இந்நபரின் வீடியோ கிட்டத்தட்ட 30 லட்சம் லைக்குகளைப் பெற்று இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.