Israel War: இஸ்ரேலுக்கும், காசாவை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் படையினருக்கும் இடையே பெரிய போர் வெடித்துள்ளது.


இஸ்ரேல் போர்: 


பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இஸ்ரேல் தனி நாடாக உருவானதில் இருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காசாவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது.  மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் தான் பலமான நாடு என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. 


ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கடும் போர் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேல் எல்லை பகுதியில் சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேலுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,800 கடந்து பதிவாகியுள்ளது.


பகீர் வீடியோ:


அதேபோல, பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த கைதிகளை வைத்து தான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.


இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், தற்போது ஹமாஸ் படையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால், அந்த வீடியோ உண்மையானாதா? என்று தெரியவில்லை. அந்த வீடியோவில், குழந்தைகளை இவர்கள் துப்பாக்கி முனைவில் பாதுகாத்து வருவது போன்ற காட்சிகள் உள்ளன. மேலும், ஹமாஸ் படையினர் அரபு மொழியில் பேசுகிறார்கள்.


குழந்தையின் தொட்டிலை ஆட்டி விடுகிறார்கள். சிறுவன் ஒருவரின் ஷூ லேஸை மற்றொருவர் கட்டிவிடுகிறார். மற்றொருவர் குழந்தைக்கு தண்ணீரை கொடுக்கிறார். இவர்கள் அனைவரின் கைகளில் துப்பாக்கிகள் இருக்கின்றன.மேலும், வீடியோவின் துவக்கத்தில் டேபிள் மீது அமர்ந்து, அழுது கொண்டு இருந்த ஒரு குழந்தையின் காலில் ஹமாஸ் படையினர் காயத்திற்கு கட்டு போடுகின்றனர்.  இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவிய நிலையில், இது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.   இவர்கள் குழந்தைகளை ஆயுதங்களுடன் தான் பாதுகாப்பார்களா? இவர்  உண்மையிலேயே  ஹமாஸ் படையினரா? இந்த வீடியோ உண்மையா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Israel War: இஸ்ரேல் போர்: தாக்குதலில் சிக்கிய பத்திரிக்கையாளர் உயிரிழப்பு - 6 ஊடகவியலாளர்கள் படுகாயம்