Israel War: இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் பெண் ஒருவரின் சடலத்தை அரை நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உலகை உலுக்கிய இஸ்ரேல் போர்:


யாரும் எதிர்பாராத சூழலில், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் இஸ்ரேல் மட்டும் இன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹமாஸ் படையினரின் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலைய வைத்துள்ளது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இஸ்ரேல் போரை தொடங்கியுள்ளது. வான் வழியாக மட்டும் இன்றி நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இந்திய மக்களுக்கு இந்திய மற்றும் பாலஸ்தீன தூதரகங்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 


இந்த தாக்குதலால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் ஐடி வேலை செய்பவர்களும், மாணவர்களே ஆவர். மேலும், இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இவர்களில் தற்போது 27 இந்தியர்கள் எகிப்து வந்துள்ளனர் என்று மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்கமா தெரிவித்துள்ளார். 


பகீர் வீடியோ:


இப்படி பரப்பான சூழலில், ஹமாஸ் குழு ஒரு பெண்ணை கொன்று, அவரது உடலை அரை நிர்வாண நிலையில் எடுத்து செல்லும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில்  உலா வந்துக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் அந்த பெண் உடலின் மீது ஹமாஸ் குழுவினர், தங்கள் கால்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், அந்த பெண்ணின்  மீது எச்சில் துப்புவதையும், கன்னத்தில் அறையும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது.


இப்படியே ஒரு டிரக்கில் வைத்துக் கொண்டு பெண்ணின் சடலத்தை அரை நிர்வாணமாக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சடலம் இஸ்ரேலிய ராணுவ வீராங்கனையுடையது என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, ஹமாஸ் குழுவினரால் கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட உடல், தன்னுடைய மகளுடையது என ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பான வீடியோவில் அந்த பெண் பேசியதாவது, "என் மகள் பெயர் ஷானி லூக். அது நிச்சயமாக ஷானி தான். ஒரு இசை நிகழ்ச்சிக்காக இஸ்ரேலுக்கு சென்றார். என் மகளின் உடலை மட்டுமாவது திரும்ப ஒப்படைத்துவிடுகள். என் மகளின் உடலை மீட்பதற்கு மக்கள் உதவ வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.   இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் படிக்க


போரால் பற்றி எரியும் இஸ்ரேல்.. குடும்பத்துடன் சிக்கிய இந்திய எம்.பி - பதறிபோன முதலமைச்சர்