Israel War: காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் போர்:
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோதலை, ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், இஸ்ரேல் மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள் பெரும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. குறிப்பாக, அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அதுமட்டும் இன்றி, காசா நகர மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்து, பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது இம்மாதிரியாக தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பரப்பு கிளப்பிய ஜோ பைடன்:
இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபார் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு நேற்று சென்றிருக்கிறார். இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஜோ பைடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இஸ்ரேலுக்கு வந்த ஜோ பைடனை, அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். அதன்பிறகு இருவரும் இஸ்ரோ-ஹமாஸ் அமைப்புக்கு நடந்து வரும் போர் பற்றி ஆலோசித்தனர். அதன்பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜோ பைடன் கூறுகையில், "நேற்று காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் நடத்தவில்லை. வேறு ஒரு குழுவினரால் தான் நடத்தப்பட்டதாக தெரிகிறது. நீங்கள் (இஸ்ரேல்) இல்லை. இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தேவையான உதவியை அமெரிக்கா செய்யும். ஐ.எஸ் பயங்கரவாதிகளை விட அவர்கள் (ஹமாஸ் அமைப்பு) மோசமானவர்கள். காசா மற்றும் மேற்கு பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இஸ்ரேலுக்கு 100 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா வழங்கும். ஹமாஸ் அமைப்பை தோற்கடிக்க இஸ்ரேலுக்கு பின்னால், அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார் ஜோ பைடன்.
இங்கிலாந்து ஆதரவு:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே 13வது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார். முன்னதாக, ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில், "மக்கள் ஒவ்வொரு உயிர் போவது மிகவும் கொடூரமானது. ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலால் பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன" என்று கூறியிருந்தார்.