போரின்போது வீரர்களைக்காப்பாற்றவும், எதிரிகளின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காகவும் ஒரு உருமறைப்பு தொழில்நுட்பத்தினை இஸ்ரேலின் உயிர்வாழும் தொழில்நுட்பமான பொலாரிஸ் சொல்யூசன்ஸ் கண்டறிந்துள்ளது.
பொலாரிஸ் சொல்யூசன்ஸ் என்ற உயிரிவாழும் தொழில்நுட்ப நிறுவனம் இஸ்ரேலினை மையமாக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஐடிஎஃப் , எஸ்ஓஎஃப் போராளிகளால் நிறுவப்பட்டது. இங்கு உயிர்வாழக்கூடிய தீர்வுகளுக்கு புதுமையான மற்றும் பயனுள்ள தொழில்நுட்பத்தை உருவாக்கிவருகின்றனர். இந்த வரிசையில், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பின் பேரில், உருமறைப்பு தொழில்நுட்பம் ஒன்றினை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் கிட்டத்தட்ட வீரர்கள் எதிரிகளின் கண்ணுக்குத் தெரியாமல் சண்டையிடுவதற்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக இரண்டாம் லெபனான் போரின் போது எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வெப்கேமராக்கள் மற்றும் இரவு பார்வை கருவி போன்றவை சிறந்த பாதுகாப்பாக இருந்தமையை வீரர்கள் புரிந்துக்கொண்டனர். இதனையடுத்து தான் போர்க்களத்தில் எதிரிகளின் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் கருவியினை செய்வதற்கான யோசனை வந்தது என சிறப்பு ஐடிஎஃப் பிரிவில் இருக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள் இந்த புதிய உருமறைப்பு தொழில்நுட்பம் பல வகையான இராணுவ சூழ்நிலைகளில் எதிரிகளைக் கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இதில் என்ன தொழில்நுட்பம்? எப்படி பயன்படுத்தப்படுகிறது என நாமும் தெரிந்து கொள்வோம்…
தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் சோதனை செய்யக்கூடிய இந்த புதிய உருமறைப்பு தொழில்நுட்பம் “கிட் 300 “என்று அழைக்கப்படுகிறது. இதில் உலோகங்கள். மைக்ரோபைபர்கள் மற்றும் பாலிமர்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை வெப்ப காட்சிகளை மறைக்க உதவுகிறது. இதன் மூலம் போர்க்களத்தில் வீரர்களின் அடையாளத்தையும், அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்ற செயல்களை எதிரிகளின் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கிறது. மேலும் இதுகுறித்து போலரிஸ் சொல்யூசன்ஸ் வலைதளத்தில், இலகுரக ஸ்ட்ரெச்சராக இரட்டிப்பாக்கக்கூடிய இந்த கிட்டினை அணிந்தவர்கள் உருமறைப்பு ஆற்றலை பெறுவதோடு போர்க்களத்தில் எதிரிகளின் கண்களுக்கு சிக்காமல் தப்பிக்க உதவுகிறது. குறிப்பாக இந்த கிட்டினை பயன்படுத்துவர்கள் மனிதர்களின் கண்கள் மற்றும் தெர்மல் சென்சார்கள் என இரண்டிற்கும் வீரர்களை அடையாளம் காண்பதை கடினமாக்குகிறது.
இந்த கிட் 300 னை, படை வீரர்கள் தங்களது உடலில் சுற்றிக்கொள்ளலாம். மேலும் பாறைகள், அல்லது பாலைவன நிலப்புரப்புகளில் ஒரு இயற்கைப்பொருளாக உருமாறுவதற்கு கிட் 300 தாள்களை ஒன்றாக இணைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதாடு போர்க்களத்தில் பைனாக்குலர் பயன்படுத்தி தேடினாலும் வீரர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது தான் இதன் தனிச்சிறப்பு என்கின்றார். இமேஜிங் தொழில்நுட்ப கிளையின் தலைவர் கால் ஹராரி ஜேன்ஸ் காமி. இத்தனை அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்த கிட் 300 தாள், சுமார் 500 கிராம் எடையுள்ளதாக தான் இருக்கிறது. எனவே இதனை ஒரு சிறிய மூட்டையாக மடிக்கும் வகையில் அமைந்துள்ளதால் போர்க்களத்தில் வீரர்கள் எளிதில் கையாள்வதற்கு உதவியாக உள்ளது. தற்போது இந்த கிட் 300 னை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சோதனை செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் போர்க்களத்தில் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய இந்த உருமறைப்பு தொழில்நுட்ப சாதனத்தினை, வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்காக கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிறப்புப் படைப்பிரிவுகளுடன் போலரிஸ் சொல்யூசன்ஸ் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.