காஜாவில் இஸ்ரேல் நடத்திய திடீர் ராணுவ தாக்குதலில் 5 வயது சிறுமி உள்பட 10 பேர் மரணமடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) காஸாவை வான்வழி மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலால் 9 வயது சிறுமி, ஹமாஸ் அமைப்பின் தலைவர் உள்பட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் ராக்கெட் மூலம் பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில், இந்த தாக்குதலால் பலியான 5 வயது சிறுமியின் உடலை வெள்ளை துணியால் சுற்றி குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கண்களையும் ஈரமாக்கி வருகிறது.
அந்த வீடியோவில் உயிரிழந்த குழந்தையின் தாத்தாவான ரியாட், “ "என் பேத்தி நர்சரி பள்ளிக்கு போக வேண்டும் என்று பெரிய கனவு கண்டாள். பள்ளிக்கு செல்ல துணியும், பையும் கேட்டுக்கொண்டு இருந்தாள் இந்த அப்பாவிப் பெண். உயிரிழ்ந்த என் பேத்தி யாருக்கு எதிராக ராக்கெட் ஏவினாள்..? இல்லை யாரிடம் சண்டைக்கு சென்றாளா..? அவள் என்ன செய்தாள்?" என்று கலக்கத்துடன் பேசினார்.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் பணிபுரிந்த அதிகாரிகள் குண்டுவீச்சில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 79 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலின் இராணுவம் 15 பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
காஸா எல்லையில் பல நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட், உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராக முன்கூட்டிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியதாக தெரிவித்தார்.
இஸ்லாமிய ஜிஹாத் என்பது ஹமாஸுடன் இணைந்திருக்கும் அதே வேளையில் சுதந்திரமாக செயல்படும் ஒரு குழுவாகும். இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கட்டவிழ்த்து விடுவதற்கு முன், ஆரம்ப இஸ்ரேலிய குண்டுவீச்சுதான் காரணம் என்று இந்த அமைப்பு தெரிவித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்