Israel Hamas War: “தலைவர்களுக்கு தலை இருக்காது” ஹமாஸின் ஹனியேவை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

Israel Hamas War: ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Continues below advertisement

Israel Hamas War: தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களை துண்டிப்போம் என, இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement

ஹமாஸ் தலைவரை கொன்ற இஸ்ரேல்

கடந்த ஜூலை மாதம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து, ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கத்தின் தலைவர்களை குறிவைப்பதாகவும் அவர் சபதம் செய்துள்ளார். இந்த அறிவிப்பானது, காசாவில் இஸ்ரேலின் போராலும் மோதலாலும் உலுக்கம் கண்டுள்ள பிராந்தியத்தில்,  தெஹ்ரானுக்கும் அதன் பரம எதிரியான இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு எச்சரிக்கை 

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பேசுகையில், “ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் இந்த நாட்களில், ​​அவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.  நாங்கள் ஹமாஸை தோற்கடித்துவிட்டோம், ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை கண்மூடித்தனமாக அழித்துவிட்டோம். உற்பத்தி முறைகளை சீர்குலைத்தோம், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்திவிட்டோம், தீமையின் அச்சுக்கு கடுமையான அடியைக் கொடுத்துள்ளோம், மேலும் கடைசியாக ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும் கடும் அடியை கொடுப்போம்.

அவர்களின் மூலோபாய உள்கட்டமைப்பை சேதப்படுத்துவோம்,  அவர்களின் தலைவர்களின் தலையை துண்டிப்போம். நாங்கள் தெஹ்ரான், காசா மற்றும் லெபனானில்  ஹனியே, சின்வார் மற்றும் நஸ்ரல்லாவுக்கு செய்தது போல் - ஹொடைடா மற்றும் சனாவில் செய்வோம்” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இஸ்லாம் ஹனியே

கத்தாரை தளமாகக் கொண்ட ஹனியே, ஹமாஸின் சர்வதேச ராஜதந்திரத்தின் முகமாக இருந்தார், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதலால் தொடங்கப்பட்ட போர் காஸாவில் உக்கிரமாக இருந்தது. பாலஸ்தீன பகுதியில் போர்நிறுத்தத்தை எட்டுவது தொடர்பாக சர்வதேச தரகு மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்று வந்தார்.

பல மாதங்களுக்குப் பிறகு, காசாவில் இஸ்ரேலியப் படைகள் ஹனியேவின் வாரிசும், அக்டோபர் 7, 2023 தாக்குதலின் மூளையுமான யாஹ்யா சின்வாரைக் கொன்றது. இது பல தசாப்தங்கள் பழமையான இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலில் சமீபத்திய இரத்தக்களரியைத் தூண்டியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜுலை மாதம் இஸ்லாம் ஹனியே கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் இஸ்ரேல் இதற்கு பொறுப்பேற்காத நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ளது.

ஏமன் மீதான குற்றச்சாட்டுகள்:

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹவுதி இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு,  இஸ்ரேலின் மீது கடற்படை முற்றுகையைச் செயல்படுத்துவதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக செங்கடலில் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகிறது. காசாவில் இஸ்ரேலின் ஓராண்டு காலப் போரில் பாலஸ்தீனியர்களுடன் ஹவுதிக்குள் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

Continues below advertisement