இஸ்ரேலில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையத்தில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “ இது ஒரு பெரிய சோகமான நிகழ்வாகும். பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறினார்.