நாடு முழுவதும் வரும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1-ஆம் தேதியில் இருந்து கோவிட்-19 தடுப்பு மருந்து பெறலாம் என இந்திய அரசு அறிவித்தது. 90  கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் தற்போது தடுப்பூசியை போட்டுக் கொள்ள தகுதியுடையவர் ஆகின்றனர். எனவே, இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரித்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும். இதனால், தடுப்பூசியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  ஏனெனில், உற்பத்தியாளர்கள் தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும்,  முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது, இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ள முடியும். 


தரவுகள் கூறுவது என்ன? 


இந்தாண்டு இறுதிக்குள்  12 பில்லியனுக்கும் ( 1200 கோடி) அதிகமான தடுப்பூசி டோஸ்களை தயாரிப்பாளர்கள் உற்பத்தி செய்யக்கூடும் என 'Duke Global Helath Innovation Centre'  ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் சமமான முறையில் அனைத்து நாடுகளுக்கும் விநியோகம் செய்தால் மட்டுமே இந்த கணிப்பு சாத்தியம் எனவும் தெரிவித்தது.     




சந்தையில் தற்போது போடப்படும் அநேக தடுப்பூசிகள் இரண்டு முறை நிர்வகிக்க கூடியதாக உள்ளன ( ஜான்சன் அண்ட் ஜான்சென் மற்றும் கன்சினோ மட்டுமே 1-டோஸ் தடுப்பூசிகளாக உள்ளன). எனவே, தற்போதைய கணிப்பின்படி, உலக மக்கள் தொகையில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசியை நிர்வகிக்க சுமார் 11 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.


தடுப்பூசி விநியோகமும் , இனப் பாகுபாடும்: 


தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படாலும், அது முறையாக அனைத்து நாடுகளுக்கும் சமமாக  விநியோகப்படுகிறதா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வாங்கி வைத்துள்ளன. இதுவரை, உலகளவில் உறுதி செய்யப்பட்ட கொள்முதல் டோஸ் 8.9 (800 கோடிக்கு மேல்) பில்லியனாக உள்ளது. மேலும் 6.6 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.   


30 கோடி ஜனத்தொகை கொண்ட அமெரிக்கா, இதுநாள் வரை 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது. 70 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பியா யூனியன் 180 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது. வெறும் 3 கோடி மக்கள்தொகை கொண்ட கனடா 31 கோடி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது. 130 கோடிக்கும் அதிகமான ஜனத்தொகை கொண்ட இந்தியா, கடந்த ஏப்ரல் 23ம தேதி வரை வெறும் 20 கோடி தடுப்பூசிகளை மட்டுமே கொள்முதல் செய்துள்ளது.  அதாவது, கனடாவில் ஒரு நபருக்கு 8.67 தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 நபருக்கு ஒரு தடுப்பூசி டோஸ் என்றளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதரத்தில் பின்தங்கிய பலநாடுகள் இன்னும் ஒரு தடுப்பூசி டோஸ்களை கூட கொள்முதல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.         


இந்தியாவில் இதுநாள் வரை 14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  போதிய தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படாத நிலையில், உற்பத்தியாளர்கள் தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும்,  முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து தான், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய் என்ற அளவிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்தது. பாரத் பயோடெக் நிறுவனம் மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யப்படும் ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு  ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.1,200க்கும் விற்கப்படும் என்று அது அறிவித்தது. 


தற்போது பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு தேசிய கட்டுப்பாட்டாளர் (இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர்) அனுமதி அளித்தது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு பரிந்துரைத்தது. உலகளவில் தடுப்பூசி உற்பத்தி வேகமேடுத்தலும், அதன் விநியோகம் சமச்சீரற்ற நிலையில் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் தேவைக்கு அதிகப்படியான தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளன. இதன் காரணமாக, உலகளவில் தடுப்பூசி விலை சரிவு எற்படாத சூழல் உருவாகியுள்ளது.  இந்த நிலையில், மாநில அரசுகள் நேரடியாக சந்தையில் கொள்முதல் செய்யலாம் என்ற மத்திய அரசின் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில், வெளிநாட்டு நிருவனங்களிடம்  தடுப்பூசி விலையை பேரம் பேசுவதற்கான ஆற்றல் மாநில அரசை விட மத்திய அரசுக்கே அதிகம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.                          


தடுப்பூசிகளின் உற்பத்தி நிலவரம் என்ன?   




 


உலகாளவிய உறபத்தியில் அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Oxford-AZ தடுப்பூசி முன்னிலை வகிக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷியா போன்ற பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் சீரம் இந்தியா நிறுவனம் இந்த தடுப்பூசியை   (‘கோவிஷீல்டு’ என்ற பெயரில்) தயாரிக்கிறது.  இந்தாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 300 கோடி Oxford-AZ தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கிட்டத்தட்ட 100 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


அதற்கு, அடுத்தப்படியாக ஜான்சன் அண்ட் ஜான்சென் நிறுவனம் 100 கோடி தடுப்பூசி டோஸ்களையும், pfizer- BioNtech நிறுவனம் 250 கோடி தடுப்பூசி டோஸ்களையும், Moderna நிறுவனம் 70 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன.