ஹார்முஸ்நீரிணைவிவகாரத்தில் அமெரிக்க அதிபர்ட்ரம்ப்பின்48மணிநேரக்கெடுவுக்குஈரானின்கடும்எச்சரிக்கைவிடுத்துள்ளதால், வளைகுடாபிராந்தியத்தில்உச்சக்கட்டபோர்பதற்றம்நிலவி வருகிறது.

Continues below advertisement

ஹார்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த கெடுவுக்கு ஈரான் ராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரானின் எரிசக்தி மையங்கள் தாக்கப்பட்டால், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான அனைத்து எரிசக்தி நிலையங்கள், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் ஆகியவற்றை தரைமட்டமாக்குவோம் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

Continues below advertisement

ஹார்முஸ் நீரிணை மூடல்

மத்தியக் கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் காரணமாக, சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மூடியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியேதான் நடைபெறுகிறது. நீரிணை முடக்கப்பட்டதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை பல மடங்கு கடுமையாக உயர்ந்து, பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எவ்வித அச்சுறுத்தலுமின்றி ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானில் உள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கி அனைத்தும் 48 மணி நேரத்தில் அழிக்கப்படும் என்றும் கெடு விதித்திருந்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிரிகள் கைவைத்தால்

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில், ஈரானிய ராணுவத்தின் செயல்பாட்டுத் தலைமையகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நாட்டின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது எதிரிகள் கைவைத்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுக்குத் தொடர்புடைய அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகளும் ஈரானின் நேரடி இலக்காக மாறும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவையான கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் மிலிட்டரி ஆபரேஷனல் கமாண்ட் கதம் அன்பியா இதை உறுதி செய்துள்ளாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சகட்டப் போர்ப் பதற்றம்

இந்த பரஸ்பர மிரட்டல்களால் வளைகுடா பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள நகரங்கள் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய அதிபயங்கர ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒருபுறம் இஸ்ரேல் உடனான மோதல், மறுபுறம் அமெரிக்கா நேரடி அச்சுறுத்தல் எனப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், ஈரானைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.