தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் தற்போது வரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கன் மாகாணத்தின் அவசரகால நிர்வாகத்தின் தலைவரான மெஹ்ர்தாத் ஹசன்சாதே இதுகுறித்து தெரிவிக்கையில், "துரதிர்ஷ்டவசமாக இப்போது வரை மூன்று பேர் இறந்துள்ளதாகவும், எட்டு பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 






இந்த நிலநடுக்கம் பந்தர் அப்பாஸிலிருந்து 103 கிலோமீட்டர் தென்மேற்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக EMSC தெரிவித்துள்ளது. EMSC இதை 6.1 நிலநடுக்கம் என்றும் ஈரானிய ஊடகங்கள் 6.1 நிலநடுக்கம் என்றும் அறிவித்தது.


அதிகாலை 1:32 மணியளவில் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஐக்கிய அரபு அமீரகவாசிகள் உணர்ந்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் (என்சிஎம்) தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் நடுக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளன.


கடந்த 2003 ம் ஆண்டு 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாம் நகரத்தை தாக்கியபோது 26,000 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், 2017 ம் ஆண்டு ஈரான் மற்றும் ஈராக் எல்லைப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 600 பேர் பலியாகினர். 9,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


1990 இல் வடக்கு ஈரானைத் தாக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 40,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300,000 பேர் காயமடைந்தனர். குறைந்தது 500,000 பேர் வீடற்று தவித்தனர்.


கடந்த 1900 ம் ஆண்டு முதல் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் இதுவரை 126,000 பேர் இறந்துள்ளதா


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண