குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 

Continues below advertisement

எப்போது தீரும்? ஈரான் - அமெரிக்கா பிரச்சனை

இஸ்ரேலை எதிர்த்து வந்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் ஈரான் ஆதரவு அளித்து வந்ததன் காரணமாகவும், அணுசக்தி கட்டமைப்புக்காகவும் அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இந்த ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் தொடங்கியது. பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஹோர்மூஸ் நீரிணை முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது. இதனை ஈரான் மூடியுள்ள நிலையில் நட்பு நாடுகளுக்கு மட்டுமே கடக்க அனுமதியளித்து வருகிறது. இதன் காரணமாக ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

குவைத் மீது ஈரான் தாக்குதல்

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் குவைத்தின் அலி அல் சலீம் விமானத் தளமும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்படும் நிலையில் மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி-28 முதல் ஈரான் - அமெரிக்கா இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அமெரிக்காவில் ட்ரம்பின் கட்சியும், இஸ்ரேலில் நெதன்யாகுவின் கட்சியும் தோல்விகளை சந்தித்தன. இதன் காரணமாக சில நாட்களாக இரு நாடுகளும் ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்த நிலையில், தற்சமயம் அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.

Continues below advertisement