குடும்பம்
பூமியில் வாழும் உயிரினங்களில் குடும்ப கட்டமைப்புகளை பின்பற்றுவதில் முதன்மையான இடம் வகிப்பது மனிதன். குழுக்களாக வாழத் தொடங்கி இன்று குடும்பம் என்ற அமைப்பில் தொடர்கிறது. குடுமபம் என்பதற்கான வரையறை ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கலாம். ஆனால், உண்மையில் குடும்பம் என்பது வெவ்வேறான உலகங்கள் கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒரு கூட்டில் வாழ்வதுதான். ஒரே கூரையின் கீழ் வாழ்தல் என்பது எளிதானது அல்ல. ஆனால், ஒவ்வொருவரின் மெனக்கடலும், அன்பும் அதனை அழகாக மாற்றுகிறது. முக்கியமாக, குடும்பம் என்ற அமைப்பின் தலையாய கடமை என்னவென்றால் அதன் உறுப்பினர்களுக்கு ‘ அன்பும் ஆதரவும்’ வழங்குவதுதான். இன்றைய காலக்கட்டத்தில் குடும்பம் என்பது எப்பப்பட்டதாக இருக்கிறது என்றும் கேள்வியும் எழுகிறது.
குடும்ப உறுப்பினர்களில் தனிநபரின் மன ஆரோக்கியமே கும்பம் என்ர ஒன்றை அர்த்தப்படுத்துகிறது. அப்படியிருக்க, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைந்து வருகிற நிலையில், அனைவரும் இதுகுறித்து சிந்திக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறவுகளின் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் உலக அளவில் ஆண்டுதோறும் மே மாதம் 15 ஆம் தேதி ‘சர்வதேச குடும்ப தினம்’ (International Family Day ) கொண்டாப்படுகிறது.
சர்வதேச குடும்ப தினம் வராலாறு:
ஐக்கிய நாடுகளின் சபை, 1993-ம் ஆண்டு குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்கப்படுத்துவதற்கான தீர்மானத்தை பொது மாநாட்டில் நிறைவேற்றியது.அதன்படி, 1994-ல் மே 15-ம் தேதியை சர்வதேச குடும்ப தினமாக அறிவித்தது. அன்றிலிருந்து, ஆண்டுதோறும் மே 15-ம் தேதி சர்வதேச குடும்ப தினமாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச குடும்ப தினம் 2022
இந்தாண்டிற்கான கருப்பொருள் 'வளர்ச்சியில் குடும்பம்' (Families and Urbanization) என்பதாகும்.
இன்றைய தினத்தில், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைந்து ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
செப்டம்பர்,25, 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகள் ஒன்றிணைந்து, Sustainable Development Goalsஐ திட்டமிட்டு அதை நோக்கி பயணிக்க முடிவெடுத்தன. அதன்படி, வறுமையை ஒழிப்பது, தீண்டாமை ஒழிப்பு,குடும்ப வன்முறை ஒழிப்பு உள்ளிட்ட 17 நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட திட்டமிட்டது. குடும்பத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புதுமையான செயல்திட்டங்களையும் அமைத்து வருகிறது.
குடும்பம் என்பது ஒரே ஒரு நாளில் மட்டும் கொண்டப்பட வேண்டிய ஒன்று இல்லை. வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, சின்ன சின்ன விஷயங்களை கவனித்து பேசி விடுவடுவது நல்லது. குடும்பத்தில் பேசுவது குறையும்போது, அங்கு அமைதியும் குறைந்து பிரச்சினை எழுகிறது. குடும்பத்தை கொண்டாடுவது என்பது அதன் உறுப்பினர்களை கொண்டாடுவதே!