அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமென்டோ கவுண்டியில் உள்ள குருத்வாராவில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியர்கள் துப்பாக்கி சூடு


அமெரிக்க நேரப்படி மதியம் 2:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிராட்ஷா சாலையின் 7600 பிளாக்கில் அமைந்துள்ள குருத்வாரா சேக்ரமெண்டோ சீக்கிய சங்கம் கோவிலில் நடந்துள்ளது. இப்பகுதி நெடுஞ்சாலை 99-க்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் கெர்பர் சாலைக்கு அருகில் உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் முன்பகை ஒன்றும் இல்லை என்றும், இது ஒருவரையொருவர் அறிந்த இரண்டு ஆண்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் சாக்ரமெண்டோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.






துப்பாக்கிச் சூடு வரை சென்ற சண்டை


இருவருக்குமிடையிலான மோதல் கைகலப்பாக ஆரம்பித்து துப்பாக்கிச் சூடாக மாறியது. சந்தேகத்திற்குரிய நபர்களில் ஒருவர் இந்தியர் என்றும், மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் சாக்ரமெண்டோ கவுண்டி ஷெரிப் அலுவலக செய்தித் தொடர்பாளர் அமர் காந்தி தெரிவித்தார். மூன்று பேர் சண்டையில் ஈடுபட்டதாக காந்தி கூறினார், அது பின்னர் துப்பாக்கிச் சூடாக மாறியது. இந்த சம்பவத்தில் ஒரு நபர் மற்றொரு நபரின் நண்பரை துப்பாக்கியால் சுட்ட நிலையில், சுட்டவர் தப்பித்து ஓடும் முன் கீழே விழுந்தவரின் நண்பர் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Budget: இரண்டு நாட்களுக்குப் பிறகு கூடும் சட்டமன்றம்; மாநகராட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் சென்னை மேயர்! இன்றைய அதிரடி நிகழ்வுகள்!


மூவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்


"அந்த சண்டையில் ஈடுபட்ட மூவரும் ஒருவரையொருவர் அறிந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த சண்டை இதற்கு முன்பே நடந்த ஏதோ ஒரு பிரச்சனையில் இருந்து உருவானதாக தெரிகிறது," என்றார் காந்தி. சாக்ரமெண்டோ கவுண்டி போக்குவரத்துத் துறையின்படி, "சாக்ரமெண்டோ சீக்கிய சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நகர் கீர்த்தனை அணிவகுப்பை நடத்தியது, அதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அப்பகுதியில் சாலைகளை மூடியது,"என்று தெரிகிறது.






துப்பாக்கிகளை அகற்ற வேண்டும்


சாக்ரமென்டோ சிட்டி கவுன்சில் உறுப்பினர் லிசா கப்லன், பிராட்ஷா குருத்வாராவில் நடந்த முதல் நாகர் கீர்த்தனையின் கொண்டாட்டத்தில் தான் கலந்துகொண்டதாக கூறினார். "துப்பாக்கிச்சூடு நடந்ததால், பலர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மனமுடைந்துவிட்டேன்" என்று கப்லான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். "ஒரு கொண்டாட்ட நிகழ்வை வன்முறை அழித்துவிட்டது என்பது என் இதயத்தை உடைக்கிறது. காயமடைந்தவர்களுக்கு எனது பிரார்த்தனைகள் - அவர்கள் பூரண குணமடையட்டும். நாம் பிரார்த்தனை செய்வதை நம் தெருவில் உள்ள துப்பாக்கிகளை அகற்றுவது இன்னும் முக்கியமான விஷயம். கொண்டாட்டங்களை வன்முறை கெடுக்கிறது", என்று பதிவிட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவரை அதிகாரிகள் இன்னும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.