இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுட்டில் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் துலும் பகுதியில் நேற்று இரவு நட்சத்திர விடுதியில் இரு போதைப் பொருள் கும்பலுக்கும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 


அந்தச் சண்டையில் அந்த விடுதியில் உணவு உண்டு கொண்டிருக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. அதில் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அப்போது அங்கு உணவு சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர். அதில் ஒரு இந்திய வம்சாவளி பெண் மற்றும் ஒரு ஜெர்மனி பெண் ஆகிய இருவரும் சண்டையில் குண்டு அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ரையட்(25) இந்தத் துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவர் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தற்போது வசித்து வருகிறார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் பயணம் தொடர்பாக வலைதள பக்கம் ஒன்று நடத்தி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இவர் அக்டோபர் 22ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை மெக்சிகோவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதற்காக இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக மெக்சிகோ வந்துள்ளார். அங்கு வந்து துலும் பகுதியில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். அதன்பின்னர் அன்று இரவு உணவு சாப்பிட ஒரு நட்சத்திர ஒட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட சம்பவத்தில் தன்னுடைய பிறந்தநாள் அன்று உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு 25 வயது மதிக்க தக்க இளம்பெண் தன்னுடைய பிறந்தநாள் அன்று உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த துப்பாக்கிச் சுடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் போதை பொருள் விற்பனை கும்பல் தொடர்பான விவரங்களையும் அவர்கள் சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அஞ்சலியின் உடலை அவருடைய உறவினர்களிடம் அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அஞ்சலியின் சகோதரர் அஸ்வின் அங்குச் சென்று தன்னுடைய சகோதரியின் உடலை பெறுவார் என்று கூறப்படுகிறது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: என்னது ஒரு வயசு குழந்தை வேலை செய்யுதா? 75 ஆயிரம் சம்பளமா? இதுதான் அந்த Insta வேலை