அமெரிக்கா நியூஜெர்சியில் நடைபெற்ற வருடாந்திர அழகி போட்டியில் வர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க இளம்பெண் ஆர்யா வால்வேகர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2022 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.


 






போட்டியில் வென்ற பிறகு, 18 வயதான அவர் நடிகையாக ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். "என்னை வெள்ளித்திரையில் பார்ப்பதும், திரைப்படங்கள் மற்றும் டிவியில் வேலை பார்ப்பதும் எனது சிறுவயது கனவாக இருந்தது. புதிய இடங்களுக்கு பயணம் செய்வது, சமைப்பது, விவாதிப்பது ஆகியவை எனது பொழுதுபோக்குகளாக உள்ளன" என வால்வேகர் கூறினார். 


பாலிவுட் படங்களின் ரசிகையான வால்வேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "80கள் மற்றும் 90களில் முன்னணி பின்னணிப் பாடகர்கள் முன் என்னை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் ஜாம்பவான்களான குமார் சானு, அல்கா யாக்னிக் மற்றும் உதித் நாராயண் ஆகியோருக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது ஒரு மரியாதை. அதற்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.


வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி சௌமியா ஷர்மா முதல் ரன்னர் அப் ஆகவும், நியூ ஜெர்சியைச் சேர்ந்த சஞ்சனா செகுரி இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.


இந்தியாவிற்கு வெளியே நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்திய அழகி போட்டி இதுதான். 40ஆவது அழிக போட்டி தற்போது நடத்தப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அழகி போட்டி, நியூயார்க்கை சேர்ந்த இந்திய அமெரிக்கர்களான தர்மத்மா மற்றும் நீலம் சரண் ஆகியோரால் தொடங்கப்பட்டது.


"பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்தின் ஆதரவிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என உலகளாவிய அழகி போட்டிகளின் நிறுவனரும் தலைவருமான தர்மாத்மா சரண் கூறியுள்ளார்.


வாஷிங்டனை சேர்ந்த அக்ஷி ஜெயின் மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏவாகவும், நியூயார்க்கைச் சேர்ந்த தன்வி குரோவர் மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏவாகவும் பட்டம் சூட்டப்பட்டனர். மிஸ் இந்தியா யுஎஸ்ஏ, மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ ஆகிய மூன்று வெவ்வேறு போட்டிகளில் 30 மாநிலங்களைச் சேர்ந்த 74 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்கள் அதே குழுவால் ஏற்பாடு செய்யப்படவுள்ள உலகளாவிய அழகி போட்டிகளில் பங்கேற்க அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மும்பைக்கு செல்ல உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண