ஏஞ்சலோ மோரியோண்டோவின் (Angelo Moriondo)-வின் 171-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிடுள்ளது.
உலக அளவில் வளர்ச்சி, அறிவியல், கலை, உள்ளிட்ட் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர்களை அவர்களின் பங்களிப்பை போற்று, வகையில் அவர்களது பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு நாளன்று சிறப்பித்து டூடுள் வெளியிடுவது வழக்கம். வராற்று சிறப்புமிக்க நாட்களுக்கு கூகுளில் டூடுள் இடம்பெறுவதைக் காணலாம்.
காபி பிரியர்களே! நமக்கு ஃபில்டர் காபி என்றாலே மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். எக்ஸ்பிரசோ, காப்பச்சினோ உள்ளிட்ட பல காபி வகைகள் இருக்கின்றன. எளிதாக காபி தயாரிக்க சிறப்பான இயந்திரத்தை உருவாக்கியவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவரின் 171-வது பிறந்தநாள் இன்று. எக்ஸ்பிரசோ காபியை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இவர், எக்பிரசொ இயந்திரங்களின் தந்தை (godfather of espresso machines) என்ற போற்றப்படுபவர். இதனை கொண்டாடும்விதமாக, கூகுள் எளிதாக, விரைவாக காபிகளை தயாரிக்கும் இயந்திரத்தின் உருவத்துடன் டூடுள் வெளியிட்டுள்ளது.
யார் இந்த ஏஞ்சலோ மோரியோண்டோ?
ஏஞ்சலோ மோரியோண்டோ இத்தாலியில் உள்ள ஒரு தொழில்முனைவோர் குடும்பத்தில் பிறந்தவர். 1851- இல் பிறந்த இவரது குடும்பம் தொழில் செய்து வந்தனர். இவருடைய அப்பா, மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தவர். மோரியாண்டோ வளர்ந்த பிறகு, மதுபானம் நிறுவனத்தை தந்தை மகனின் வசம் ஒப்படைத்தார். திறம்பட செயல்பட்ட மோரிண்யோண்டோ மதுபான நிறுவனத்துடன் காபி தயாரிப்பதையும் தொடங்கினார். இவரின் புதுமையான ஐடியா மற்றும் உழைப்பினால் உருவானதுதான் ’”Moriondo and Gariglio” என்ற பிரபல சாக்லெட் நிறுவத்தை துவக்கி நடத்தி வந்தார்.
இத்தாலி என்றாலே காபிக்கு பிரபலமான நாடு. அங்கிருக்கும் மக்கள் வரிசையில் நின்று ஒரு காபிக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதை சரியாக புரிந்துகொண்ட தன் திறைமையை முழுமையாக வெளிகாட்டினார் மோரியோண்டோ. அதன் விளைவாக உருவாகியது ‘ எக்ஸ்பிரசோ இயந்திரம்’ 1884-ல் இது பயன்பாட்டிற்கு வந்தது. உலகமே இவரை கொண்டாடியது.
இத்தாலியில் உள்ள பிரபல இரண்டு ஹோட்டல்களை இவர் வாங்கினார். இவருக்கு கீழ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. இவர் தயாரித்த எக்ஸ்பிரசோ இயந்திரம்தான் இன்று உலகம் முழுக்க நாம் சுவையான எக்ஸ்பிரசோ குடிக்க காரணம்.
எக்ஸ்பிரசோ என்பதற்கு நல்ல விளக்கம் அளிக்கும் வீடியோ லிங்க்:
ஹேப்பி 171- ஏஞ்சலோ மோரியோண்டோ- நாங்கள் குடிக்கும் ஒவ்வோரு கப் எக்ஸ்பிரசோவிலும் உங்கள் அன்பு இருக்கிறது. நன்றிகளும் வாழ்த்துகளும்...