தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு உணவு, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இலங்கை வாசிகள் தங்களது தினசரி வாழ்கையை கடத்தவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நெருக்கடியான நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
இலங்கைக்கு அண்டை நாடு என்பதின் அடிப்படையில் இந்தியா பல உதவிகளை செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பபட்டது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு புறப்பட்டது. இந்தக்கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.
9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் இன்றைய தினம் இலங்கையை சென்றடைந்துள்ளது. இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய தூதகர் கோபால் பாக்லே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் ஒப்படைத்துள்ளார். இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடக்கிய பகுதியில் உள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிப்பட உள்ளது. இந்த உதவிக்கு ரணில் விக்கிரமசிங்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்