பாரிய பொருளாதார நெருக்கடியின் கீழ் தத்தளிக்கும் இலங்கையில் பெண்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜவுளி தொழிலில் உள்ள பெண்கள், தற்போது பணிநீக்கம் செய்யப்படுவார்களோ என்ற அச்சத்தில் மாற்றுத் தொழிலாக பாலியல் தொழிலுக்கு மாறியுள்ளனர்.


ஏறக்குறைய வீழ்ச்சியடைந்து வரும் இலங்கைப் பொருளாதாரத்தில் ஜவுளித் துறை மோசமான நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தற்காலிக பாலியல் தொழில் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 


சில சமயங்களில் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற பெயரில் தற்காலிக பாலியல் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஜனவரி இறுதி வரை, திரைசீலைகள் தொங்கவிடப்பட்டு தற்காலிக படுக்கைகளுடன் ஸ்பாக்கள் போல இயங்கி வந்தவை தற்போது தற்காலிக பாலியல் விடுதிகளாக மாறியுள்ளன.  ஜவுளி தொழிலில் ஈடுபட்ட பெண்களே, இங்கு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர்.


பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், "நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழக்க நேரிட்டுள்ளது. தற்போது நாம் காணக்கூடிய சிறந்த தீர்வு பாலியல் தொழிலே என்றும் கேள்விப்பட்டோம். எங்களின் மாதச் சம்பளம் சுமார் 28,000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 


ஆனால், பாலியல் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வரை கிடைக்கிறது. எல்லோரும் என்னுடன் உடன்பட மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மை" என்றார்.


இது தொடர்பாக, தி மார்னிங்கில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பாலியல் தொழிலில் சேரும் பெண்களின் எண்ணிக்கையில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரிட்டனின் புகழ்பெற்ற தி டெயிலி டெலிகிராப் செய்தி வெளியிட்டது.


நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜவுளி தொழிலில் ஈடுபட்ட பெண்கள்தான், தற்போது பாலியல் தொழிலுக்கு மாறி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயங்கி வரும் Stand Up Movement Lanka அமைப்பு இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 


இதுகுறித்து Stand Up Movement Lanka அமைப்பின் நிர்வாக இயக்குநர் அஷிலா தண்டெனிய கூறுகையில், "இந்த பெண்கள் தங்கள் பிள்ளைகள், பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி தருவதில் முனைப்பாக உள்ளனர். இலங்கையில் எஞ்சியிருக்கும் சில தொழில்களில் ஒன்றுதான் பாலியல் தொழிலாகும்" என்றார்.


ஜவுளித் தொழிலை கடுமையாகப் பாதித்த மிக பணவீக்கம், பாலியல் தொழிலை நோக்கி தள்ள முக்கியப் பங்காற்றுகிறது. எரிபொருள், உணவு மற்றும் மருந்து ஆகியவற்றின் பற்றாக்குறை தலைவிரித்தாடுவதால் இந்த பெண்களை பாலியல் தொழிலுக்கு சென்றுள்ளனர். 


அத்தியாவசியப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், உணவு, மருந்துகள் ஆகியவற்றுக்காக உள்ளூர் கடைக்காரர்களுடன் பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தொழில்துறை மண்டலங்களில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையின் கீழ் பாலியல் தொழில் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண