ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா  ஜோலி இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவர் இணைந்த 20 மணி நேரத்தில் ஐம்பது லட்சம் பின்தொடர தொடங்கியுள்ளனர். அவர் இட்ட முதல் பதிவை இருபது லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அந்த பதிவை இதுவதற்காகவே சமூக வளைதளத்தில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவானது தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கனிஸ்தானில் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுள் ஒரு பதின் வயது சிறுமியின் கண்ணீர் கடிதத்தை சுமந்துள்ளது.


அந்த கடிதத்தில் அந்த சிறுமி பயத்தையும், கையருநிலையையும்  தன் உணர்வுகளையும் உருக்கி எழுதியிருக்கிறார்.  "இருபது வருடங்கள் கழித்து மீண்டும் எங்கள் உரிமைகள் இழந்து நிற்கிறோம், எங்கள் அனைவரது வாழ்வும் இருண்டுள்ளது, நாங்கள் மீண்டும் சுதந்திரத்தை இழந்துவிட்டோம்" என்று எழுதியிருக்கிறார் அந்த சிறுமி.


அந்த கடிதத்தை பகிர்ந்து ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது,"இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம். ஆப்கானிஸ்தான் மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் திறனை இழந்து, தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த .உடையாத நிலையில் உள்ளார்கள். எனவே நான் இன்ஸ்டாகிராமில் அவர்கள் கதைகளையும் உலகெங்கிலும் அடிப்படை உரிமைக்காக போராடும் குரல்களையும் பகிர்ந்து கொள்ள வந்தேன்."


2011 இல் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்தபோது, ​​ஆப்கானிஸ்தான் அகதிகளை சந்தித்ததை பகிர்ந்து கொண்டார்.  "நான் 9/11 தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருந்தேன், அங்கு தலிபானை விட்டு தப்பியோடிய ஆப்கானிஸ்தான் அகதிகளை சந்தித்தேன். இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு. ஆப்கானியர்கள் தங்கள் நாட்டைப் பிடித்திருக்கும் பயம் மற்றும் நிலையற்ற தன்மையால் மீண்டும் இடம்பெயர்வதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.



9/11 தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, 2011 இல் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்தபோது, ​​ஆப்கானிஸ்தான் அகதிகளை சந்தித்ததை நடிகை பகிர்ந்து கொண்டார். "நான் 9/11 க்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருந்தேன், அங்கு தலிபானை விட்டு தப்பியோடிய ஆப்கானிஸ்தான் அகதிகளை சந்தித்தேன். இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு" என்று அவர் எழுதினார். "ஆப்கானியர்கள் தங்கள் நாட்டைப் பிடித்திருக்கும் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் மீண்டும் இடம்பெயர்வதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.


ஏஞ்சலினா ஜோலி ஆப்கானிஸ்தான் அகதிகளை "உலகின் மிகவும் திறமையான நபர்கள்" என்று குறிப்பிட்துள்ளார், அவர்கள் நாட்டின்  சுமையாக கருதப்படுவது "வேதனை அளிக்கிறது" என்று கூறினார். "இவ்வளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பது, இரத்தம் சிந்துவது மற்றும் உயிர்களை இழப்பது மட்டுமே இவர்களுக்கு வாய்ப்பது, புரிந்துகொள்ள முடியாத ஒரு தோல்வியை உணர்த்துகிறது" என்று தனது பதிவில் எழுதியுள்ளார். "பல வருட காலங்களாக ஆப்கானிஸ்தான் அகதிகள் - உலகின் சில திறமையான நபர்கள் - சொந்த நாட்டிற்குள்ளே ஒரு சுமை போல் கருதப்படுவது துக்கம் மிகுந்தது," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அந்த கடிதத்தை அந்த சிறுமி  "ஓடமாட்டேன்" என்று கூறி முடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உதவ வழிகளைத் தேடுவேன் என்றும் எழுதியுள்ளார். ஏஞ்சலினா ஜோலி "அர்ப்பணிப்புள்ள மற்றவர்களைப் போல, நான் விலக மாட்டேன். நான் தொடர்ந்து உதவ வழிகளைத் தேடுவேன். மேலும் நீங்கள் என்னுடன் இணைவீர்கள் என்று நம்புகிறேன்," என்று கூறி முடித்திருக்கிறார்.



ஏஞ்சலினாஜோலி, பத்திரிகையாளர் லின்ஸி பில்லிங் மூலம் கிளிக் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்களின் குழுவின் படத்தையும் இந்த பதிவுடன் பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான படைகள் வெளியேறியதால், கடந்த வாரம் நாட்டில் போர் முடிந்துவிட்டதாக தலிபான் அறிவித்தது. அவர்கள் ஆகஸ்ட் 15 அன்று காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர்.


தலிபான்கள் நாடு திரும்பியதால், பல ஆப்கானியர்கள் தங்கள் ஷரியா அல்லது இஸ்லாமிய மதச் சட்டத்தை விதிப்பதில் கடந்தகாலங்களில் அனுபவித்த கடுமையான நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு திரும்புவார்கள் என்று அஞ்சுகின்றனர். அவர்களின் 1996-2001 ஆட்சியின் போது, ​​பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதி இல்லை, கல்லெறிதல், சவுக்கடி மற்றும் தூக்கு தண்டனை போன்றவைகள் வழங்கப்பட்டன.