பொதுவாக நீச்சல் குளம் என்பது பலருக்கு ஒரு பேரின்பத்தை தரும் இடமாக இருக்கும். அதே அந்த இடம் தரையில் இல்லாமல் ஆகாயத்தில் இருந்தால் அதற்கு கூடுதல் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் ஏற்படும். அந்தவகையில் லண்டனில் ஒரு பகுதியில் 10ஆவது மாடியில் நீச்சள் குளம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் தென்மேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள ஒரு நயன் எல்ம்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது.
இந்த நீச்சல் குளம் அக்கட்டிடத்தையும் பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பையும் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இது நிலத்தில் இருந்து 115 அடிக்கு மேலான உயர்த்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் அக்குடியிருப்பு மக்கள் குளித்து விளையாடுவது தொடர்பான வீடியோ வெளியானது. இதை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு பல தரப்பட்டவர்களும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நீச்சள் குளம் 25 மீட்டர் தூரம் நீளமாக உள்ளது. இது கடந்த மே மாதம் 19ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் இருந்து பார்க்கும் போது லண்டன் நகரம் மற்றும் நாடாளுமன்றம் சிறப்பாக தெரியும்.
உலகிலேயே அமைக்கப்பட்ட முதல் மிதக்கும் நீச்சல் குளம் இது தான். இதனால் இது பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், "இந்த நீச்சல் குளத்திற்கு அருகே அமர்ந்து ஒரு நாள் முழுவதும் நான் பார்த்து கொண்டே இருப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "இங்கிலாந்தில் நிறையே இடங்கள் இருக்கும் போது அதிகமாக மழை பெய்யும் லண்டனில் இந்த நீச்சல் குளத்தை கட்டுவது எனது கடைசி முடிவாக இருந்திருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பலர் தங்களது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதில் சில
இவ்வாறு பலரும் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.