ஆபாச படம் குறித்து நடைபெறும் ஆய்வுக்காக இளம்பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுவாக வேலையில்லாதவர்கள், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகளவில் ஆபாச படங்கள் பார்ப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் பெட்பைபிள் என்ற ஆய்வு தளம் தொழில் முறை ஆய்வுக்காக ஆபாச படம் பார்க்கும் பணிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தது. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் இருப்பவர்களில் சுமார் 90 ஆயிரம் பேர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பாலின நிலைகள், கால அளவு, புணர்ச்சியின் எண்ணிக்கை, ஆண் மற்றும் பெண் விகிதம் மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தரவைச் சேகரிப்பது போன்றவை பெட்பைபிள் தளத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வேலைக்கு அனைவரையும் பின்னுக்கு தள்ளி க்ரீனாக்கைச் சேர்ந்த ரெபேக்கா டிக்சன் என்ற பெண் இந்த வேலைக்காக தேர்வு செய்யப்பட்டார். கார் இன்சூரன்ஸ் சேவைப் பிரதிநிதியாக பணி செய்து வரும் அவர் நாள் ஒன்றின் 5 மணி நேரத்தை இந்த வேலைக்காக செலவு செய்வதாக தெரிவித்துள்ளார். அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,500 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
விரைவில் முழு நேர பணியாளராக பணி செய்ய தான் முடிவு செய்யும் அளவுக்கு தான் புதிய வேலையில் மிகுந்த ஆர்வமாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பதாக ரெபேக்கா டிக்சன் கூறியுள்ளார். மேலும் தான் ஒரு சிறிய நகரத்திலிருந்து நான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ஆபாசத்தைப் பார்ப்பதற்கு யார் தான் பணம் பெற விரும்ப மாட்டார்கள்?. பொதுவாக ஆபாச படங்களை நான் மகிழ்ச்சிக்காக சொந்தமாக பார்க்கும்போது சில விஷயங்களைத் தவிர்ப்பேன்.
ஆனால் தற்போது வெளிப்படையாக நான் வீடியோக்களை முழுமையாகப் பார்க்கிறேன். நிறைய விஷயங்களை நான் கவனிக்கிறேன். பணியில் இணைந்த பின் அதிகம் பார்க்கப்பட்ட 100 வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என ரெபேக்கா டிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்