இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அறிவிப்பிற்கு பிறகு, ஹமாஸ், பிணையாக வைத்திருந்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படை பெண்கள் நான்கு பேரை விடுவித்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமால் இடையில் , சுமார் 15 மாதங்களுக்கு மேலான தொடர் போர் நடைபெற்று வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பிணையாக உள்ள மக்களை இருவரும் திருப்பி அனுப்ப முடிவெடுத்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்ததின் படி, ஹமாஸ் தனது பிடியில் இருந்த 3 இஸ்ரேலிய பெண்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவித்தது. இதற்கு பதிலாக, இஸ்ரேல், 90 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. அதோடு, இஸ்ரேஸ் 200 பாலஸ்தீன மக்களை விடுவிடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
7, அக்டோபர், 2023- தாக்குதலின்போது பிடித்து வைக்கப்பட்ட கரினா அரியேவ் (Karina Ariev, 20), டேனியல்லா கில்போவா (Daniella Gilboa, 20), நாம லெவி (Naama Levy, 20), மற்றும் லிரி அல்பாக் ( Liri Albag, 19) ஆகிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, காசாவில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் வசம் 4 பேரும் இன்று (25.01.2025)ஒப்படைக்கப்பட்டனர். காசா நகரில் ஏராளமானோர் இவர்களை வரவேற்க காத்திருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பிணை கைதிகளாக இருந்தவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்படுவார்கள் என இஸ்ரேஸ் ராணுவம் உறுதி அளித்துள்ளது.
காசா போர் நிறுத்தத்தின் ஆறு வார முதல் கட்டத்தில், விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு பெண் ராணுவ வீரருக்கும் ஈடாக 50 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, நான்கு பேருக்கு ஈடாக 200 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் உட்பட 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். அதற்கு ஈடாக, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்கும்.
இந்த 42 நாட்களில், காஸாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறத் தொடங்கும். இந்தப் பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறிய பின்னரே இங்கு வசிப்பவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும். அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலிய துருப்புக்கள் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறாது என ஒப்பந்தத்தின் நடைமுறையாகும்.