ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம்(UNFPAகொரோனா பரவல் ஊரடங்கின் போது பெண்களும், குழந்தைகளும் துன்புறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்தது.  குடும்ப வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள், குழந்தைகள் திருமணங்கள் உள்ளிட்டவை  திடீரென அதிகரித்ததாக 2021 உலக மக்கள் தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.     


இந்த நிதியம் குடும்ப நல சுகாதாரம், குடும்பத் திட்டமிடல், மக்கள் தொகை கொள்கை உருவாக்கம் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது.         


"உலகில் உள்ள பெண்களில் பாதி பேர், இன்று வரையிலும் உடலுறவு, கருத்தடை,சுகாதாரம் போன்ற தங்கள் பிரச்சனைகளுக்கு  முடிவெடுக்க முடியாத அவல நிலையில் உள்ளனர். இந்த நிலை நம் அனைவரையும் சீற்றப்படுத்த வேண்டும்" என்று நிதியத்தின் நிர்வாக இயக்குனர் நடாலியா கனெம் செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.


 



UNFPA படம் 


 


"லட்சக்கணக்கான பெண்கள் ஒரு முடிவைத் தாமாகவே முன்வந்து எடுக்கும் உரிமையுள்ள நிலையில் இல்லை. அவர்களின் வாழ்க்கை மற்றவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உடல் தன்னாட்சியை மறுப்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். இத்தகைய போக்கு பாலின பாகுபாட்டிலிருந்து எழும் வன்முறையை நிலைநிறுத்துகிறது" என்றும் தெரிவித்தார். 






 


ஊரடங்கின் முதல் வாரத்தில், குடும்ப வன்முறைகள் திடீரென அதிகரித்திருந்தை இந்திய அரசு சுட்டிக் காட்டியிருந்தது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் படி, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை, குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பாக 420 புகார்கள் பெறப்பட்டன. குழந்தைகள் உதவி இந்திய அறக்கட்டளை தகவல் படி,  குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள் தொடர்பாக 3941 புகார்கள்  பெறப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.