FIRST ON: யோகா தினத்தில் பங்கேற்ற இந்தியர்கள் மீது தாக்குதல்... மாலத்தீவு மைதானத்தில் அத்துமீறல்!

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தவர்கள் மீதுதாக்குதல் நடத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று காலை மாலத்தீவு தேசிய கால்பந்து மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய தூதரகம், இந்திய கலாசார மையம், மாலத்தீவு விளையாட்டு அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

Continues below advertisement

இதோ அந்த வீடியோ!

 

அப்போது, யோகா தின கொண்டாட்டத்தின் போது சிலர் மைதானத்தில் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக மாலத்தீவில் இந்தியர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. 

இதையடுத்து, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர இந்தியாவுக்கு மாலத்தீவு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தவர்கள் மீதுதாக்குதல் நடத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இதுகுறித்து விசாரணை செய்ய அதிபர் சோலி உத்தரவிட்டுள்ளார்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola