கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது உலகளாவிய பணியாளர்களில் 12, 000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 


இதுகுறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட குறிப்பில், எங்கள் பணியின் வலிமை, எங்கள் தயாரிப்புகள், சேவைகளின் மதிப்பு மற்றும் ஆல்பபெட்டில் எங்களது ஆரம்ப முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக எங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.





 


இன்று நாங்கள் எதிர்கொள்ளும் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்திற்காக விரைவாக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பணி நீக்கத்திற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


இந்த வார தொடக்கத்தில் கூகுளின் போட்டியாளரான மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.