கூகுள் நிறுவனம் தவறுதலாக ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்கில் 2 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதை கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.


”பணம் வேண்டாம் என்றாலும் பரவாயில்லை”


சைபர் செக்யூரிட்டி நிபுணரான சாம் கர்ரி, கூகுள் நிறுவனம் தனக்கு சுமார் ரூ.2 கோடி( 250,000 டாலர் ) பணத்தை செலுத்தி உள்ளதாகவும், ஏன் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பபட்டது தெரியவில்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் கூகுளை எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டிருந்தார். உங்களுக்கு பணம் திரும்ப வேண்டாம் என்றாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார்




நன்றி தெரிவித்த கூகுள்


கூகுள் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள், தங்களது மென்பொருளில் ஏதேனும் பிழையை கண்டறிந்து தெரிவிப்பவர்களுக்கு, அதற்கான வெகுமதியை வழங்கும். இந்நிலையில் தவறுதலாக, சாம் கர்ரி என்பவரின் வங்கி கணக்கில் ரூ. 2 கோடி அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், பணம் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளது. மேலும் ஏற்பட்ட தவறுகளை சரி  செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தது.


இந்நிலையில் சைபர் செக்யூரிட்டி நிபுணரான சாம் கர்ரி, கூகுள் நிறுவனம் அனுப்பிய ரூ.2 கோடி பணத்தை திருப்பி அனுப்ப போகிறேன் என தெரிவித்துள்ளார்.