Instagram down: திடீரென செயல்படாமல்போன இன்ஸ்டாகிராம்.. அதிர்ச்சியடைந்த பயனாளர்கள்..! என்ன ஆச்சு?

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம் சுமார் 1 மணி நேரமாக செயல்படாமல் போனதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Continues below advertisement

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராம் சுமார் 1 மணி நேரமாக செயல்படாமல் போனதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Continues below advertisement

பிரபல சமூக  வலைத்தள செயலிகளில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. இதனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ, இன்ஸ்டா ஸ்டோரி, ஸ்டேட்டஸ், தனிப்பட்ட மெசெஜ்களை நீக்கி கொள்வது என பல வசதிகளை கொண்ட இந்த தளம் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இதனிடையே உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்கள் தங்களால் இன்ஸ்டாகிராம்  தளத்தை பயன்படுத்த முடியவில்லை என புகார் தெரிவித்தனர். இதில் அமெரிக்காவில் 46,000 க்கும் மேற்பட்ட பயனாளர்களும், இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்களும் வந்ததாக கூறப்படுகிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் #instagramdown என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். 

இதனையடுத்து பயனாளர்களின் புகார்களை கொண்டு உடனடியாக கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டது.  இதுவரை இன்ஸ்டாகிராம் கோளாறு குறித்து எந்தவித தகவலும் அளிக்கப்படாத நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பிறகு வழக்கம்போல இன்ஸ்டாகிராம் செயல்பட தொடங்கியது. 

 

Continues below advertisement