க்ளென் மேக்ஸ்வெல், வினி ராமன் காதல் கதை எல்லோருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் சொல்கிறோம் கேளுங்கள். 


ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ்ப் பெண் வினி ராமன். இவர் பார்மஸி படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெலுக்கும் இடையே மலர்ந்த காதல் இரண்டு ஆண்டுகளாக நீடித்த நிலையில், தற்போது திருமணத்தில் சங்கமித்துள்ளது.


இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அப்போதே, அதற்காக இந்திய முறைப்படி நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது கொரோனா உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. தொற்று உச்சத்தில் இருந்ததால் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த ஜோடி கடந்த 18 ஆம் தேதி (மார்ச் 18) அன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டது. இந்நிலையில் வரும் மார்ச் 27 ஆம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக பெண் வீட்டார் சார்பில் அடிக்கப்பட்ட தமிழ் மொழிப் பத்திரிகை இணையத்தில் வைரலானது. 




இந்நிலையில் இத்தம்பதியின் நலங்கு / ஹல்தி நிகழ்ச்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வினி தனது இன்ஸ்டா பக்கத்தில் எங்களின் நலங்கு நிகழ்ச்சியிலிருந்து என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். திருமணக் கொண்டாட்ட வாரம் தொடங்கிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.






இன்னொரு போஸ்ட்டில் ஹேப்பி வைஃப், ஹேப்பி லைஃப் என்று பகிர்ந்துள்ளார்.