வெப்பமயமாதல் காரணமாக, உலகின் மிகவும் பிரபலமான சில பனிப்பாறைகள் 2050 ஆம் ஆண்டிக்குள் மறைந்துவிடும் என யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஐ.நா. அறிக்கை


ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பானது, உலகிலுள்ள 50 உலக பாரம்பரிய தளங்களில் உள்ள சுமார் 18,600 பனிப்பாறைகளை கண்காணித்து வருகிறது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உருகி காணாமல் போய்விடும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. 


இந்த அறிக்கையில் உள்ள 50 உலக பாரம்பரியக் தளங்களில் உள்ள பனிப்பாறைகள், பூமியில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் 10 சதவீதம் உள்ளன. இத்தாலியில் உள்ள டோலமைட்டுகள், அமெரிக்காவில் உள்ள யோசிமிட் மற்றும் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை உள்ளிட்டவை இதில் அடங்கும்.


வெப்பமயமாதல்: 


கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வுகள் காரணமாக அதிகமான விகிதத்தில் புவி வெப்பமடைந்து வருவதாகவும், இந்த வெப்ப அதிகரிப்பால் பனிப்பாறைகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து உருகுவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்துறை புரட்சி, 18ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்-க்கு (2.7 டிகிரி பாரன்ஹீட்) கீழே வைத்திருப்பதன் மூலம் மீதமுள்ள பனிப்பாறைகளை சேமிக்க முடியும் என்றாலும், இந்த உலக பாரம்பரிய பனிப்பாறைகளில் உள்ள சுமார் 50 சதவீதம் கிட்டத்தட்ட 2100ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக பனிப்பாறைகள் மறைந்துவிடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


பனிப்பாறைகள் ஒவ்வொரு ஆண்டும் 58 பில்லியன் டன் பனிக்கட்டிகளை இழந்து வருவதாகவும், இது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் ஒருங்கிணைந்த வருடாந்திர நீர் பயன்பாட்டிற்கு சமமானதாகும் என கூறப்படுகிறது.


இதன் காரணமாக ஆண்டுதோறும் கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும், பல் நிலப்பகுதிகள் மூழ்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.


முக்கிய பனிப்பாறைகள்:


ஆபிரிக்காவில், கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா மற்றும் கென்யா மலை உட்பட உலக பாரம்பரிய தளங்களில் உள்ள அனைத்து பனிப்பாறைகளும் இதில் அடங்கும். 


ஆசியாவில் யுன்னான் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பனிப்பாறைகள் மற்றும் மேற்கு தியான்-ஷானில் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தில் உள்ளன. 


ஐரோப்பாவில், பைரனீஸ் மான்ட் பெர்டு மற்றும் டொலமைட்களில் உள்ள பனிப்பாறைகளும் இதில் அடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்:


இதுகுறித்து, யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே தெரிவிக்கையில், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தன் அளவை குறைப்பதன்  மூலம், புவி வெப்பயமாதலை குறைக்க முடியும் என்றும், பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!