பொதுவாக 25 வயதை கடந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை தலை முடி கொட்டுவது தான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட தொடங்கினால் அது பெரிய மன கவலையாக அவர்களுக்கு வந்து விடும். ஏற்கெனவே இருக்கும் மன உளைச்சலால் கொட்டும் முடியின் அளவு சேர்ந்து இன்னும் அதிகமாக கொட்டும். பெண்களுக்கும் அதேபோல் தான் தன்னுக்கு முடி கொட்டுவதை அவர்களும் ஒரு பெரிய பிரச்னையாக கருதுவார்கள். இப்படி பலர் முடி கொட்டும் பிரச்னையில் தவிக்கும் போது ஒரு பெண் தன்னுடைய நீண்ட முடியை ஆடையாக வைத்து நடனம் ஆடியுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் பெண் ஒருவர் தன்னுடைய முடியை ஆடை போல் அமைத்து அது நகராமல் சரியாக நிற்க ஒரு கருப்பு பெல்ட்டை பயன்படுத்தியுள்ளார். அப்படி செய்து அவர் ஒரு இசைக்கு லேசாக நடனமும் ஆடுகிறார். இந்த வீடியோ ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மிகவும் ஆச்சரியத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் இது எவ்வளவு நீளமான முடி என்று பதிவிட்டு வருகின்றனர். மற்ற சிலர் இது நிச்சயம் உண்மையான முடியாக இருக்காது. தன்னுடைய முடியுடன் சேர்த்து சவுரி முடியை சேர்த்து இப்படி செய்திருப்பார் என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினர் இந்த பெண்ணின் கற்பனை திறனை பார்த்து அசந்து பாராட்டியும் வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த மாதம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசி என்ற 27 வயது இளம் பெண் ஒருவரின் 4 அடி நீளத்திற்கு 10 ஆண்டுகளாக முடி வெட்டாமல் வளர்த்து வந்த படம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் படமும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தச் சூழலில் தற்போது இந்தப் பெண்ணின் நீளமான முடி ட்ரெஸ் வீடியோவும் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ட்ராகன் மனிதனா? - இந்த மண்டையோட்டுக்கு வயசு 1,40,000 வருஷமாம்!