கிளாட்  மோனெட்  (Claude Monet) பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஓவியர். இவர் ஓவியம் ஒன்று ஜெர்மனியின் பார்பெர்னி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுத்தலுக்கு எதிராக ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் இந்த அருங்காட்சியத்தில் உள்ள மோனெட்டின் ஓவியத்தின் மீது உருளைக்கிழங்கு மசியலை வீசி எறிந்தனர்.


பார்வையாளர்கள் போல அருங்காட்சியகம் உள்ளே வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2 பேரும் திடீரென தாங்கள் பையில் கொண்டு வந்திருந்த உருளைக்கிழங்கு மசியலை அங்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓவியத்தின் மீது வீசி எறிந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்தவர்களிடம் பேசினர்.






அப்போது, உணவுக்காக 2050இல் திண்டாடப் போகிறோம் என்று அறிவியல் உலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நாம் அது குறித்து கவலைப்பட மறுக்கிறோம். இந்த ஓவியத்தின் மீது இருக்கும் உருளைக் கிழங்கு, தக்காளி சூப் ஆகியவற்றுக்காக கவலைப்படுகிறோம். உணவுக்காக நாம் போராடும்போது இந்த ஓவியத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. 


"அந்த ஓவியம் கண்ணாடியால் சூழப்பட்டு இருந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் ஓவியத்தை சேதப்படுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது" என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தகவல் எதுவும் இல்லை. 


முன்னதாக, இங்கிலாந்து சென்ட்ரல் லண்டனில் ஹாரோட்ஸ் பல்பொருள் அங்காடி மீது "ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்" போராட்டக்காரர்கள் ஆரஞ்சு பெயிண்டை ஸ்பிரே செய்தனர்.


இந்தச் சம்பவம் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு எதிரான குழுவின் தொடர்ச்சியான 20வது நாள் நடவடிக்கையைக் குறிக்கிறது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயிலின் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், இரண்டு எதிர்ப்பாளர்கள் சொகுசு பல்பொருள் அங்காடியின் ஜன்னல்களில் ஆரஞ்சு பெயிண்டை ஸ்பிரே செய்வதை பார்க்க முடிகிறது. 






அந்த ஷோ ரூம் கண்ணாடி முழுவதும் ஆரஞ்சு பெயிண்டாகக் காட்சியளித்தது. இந்த வீடியோவை டுவிட்டரில் 8,000-க்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். போராட்டக்காரர்கள் நைட்பிரிட்ஜ் பகுதியில் பேனர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதை போலீஸார் பின்னர் உறுதிப்படுத்தினர். பிரிட்டனில் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில்  முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதாக தகவல் வெளியானது.


ஆனால், அவர் போட்டியிலிருந்து திடீரென விலகியதை அடுத்து புதிய பிரதமராக ரிஷி சுனக் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராகும் போட்டியில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபை தலைவர் பென்னி மோர்டான்ட் குதித்தார். ஆனால், அவரால் தகுந்த ஆதரவை பெற முடியாமல் உள்ளது. பிரிட்டன் பிரதமராவதற்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது, ரிஷி சுனக்க தற்போது பிரதமராகிவிட்டார். கோடை காலத்தில் நடைபெற்ற பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸிடம் ரிஷி சுனக் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.