LUNAR ECLIPSE: சிவப்பு நிறத்தில் இருக்குமா நிலா ? நாளை நடக்க போகும் வானியல் அதிசயம் என்ன தெரியுமா?

நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தை blood moon என அழைப்பர்.

Continues below advertisement

இந்தியா மற்றும் உலகின் சில பகுதிகளில் நாளை  அன்று முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். "நாளை, சந்திரன் பூமியின் நிழலால் மறைக்கப்படும். மற்றும் சிவப்பு நிறமாக மாறும். இது சுமார் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தோன்றும் கடைசி முழு சந்திர கிரகணமாக இருக்கும்.

Continues below advertisement

இந்தியா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளைத் தவிர, ஆசியாவின் பிற பகுதிகள், வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த வானியல் நிகழ்வைக் காண முடியும் என்று வானியல் இயற்பியலாளர் டெபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.

முழு நிலவு பூமியின் நிழல் பகுதி வழியாக செல்லும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது மற்றும் சிறிது நேரம் அது கிரகணம் இருக்கும். சூரியன், பூமி மற்றும் சந்திரன், பூமியின் நிழலில் மறைக்கப்படும்போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு சந்திர கிரகணத்தில், முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுகிறது, இது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் நிழலுக்குள் இருக்கும்போது, அது சிவப்பு நிறமாக மாறும். இந்த நிகழ்வின் காரணமாக சந்திர கிரகணங்கள் சில நேரங்களில் "blood moon" என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் நாளை முழு சந்திர கிரகணத்தின் முழு விவரம்:

பகுதி சந்திர கிரகணம் ஆரம்பம் - மதியம் 2.39

முழு சந்திர கிரகணம் ஆரம்பம் - மாலை 3.46.

அதிகபட்ச முழு சந்திர கிரகணம் - மாலை 4:29 மணி

முழு சந்திர கிரகணம் முடிவடையும் நேரம் - மாலை 5:11 மணி

இந்தியாவில் சந்திர கிரகணம்:

முழு சந்திர கிரகணம் கிழக்கு பகுதிகளிலிருந்து மட்டுமே தெரியும், அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பகுதி கிரகணம் மட்டுமே தெரியும். சந்திர கிரகணம் எல்லா இடங்களிலிருந்தும் காணப்படாது, கிரகணத்தின் பகுதி கட்டத்தின் ஆரம்பம் லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளில் இருந்து பார்க்கப்படும்.

நமது வானத்தை நீலமாகவும், சூரிய அஸ்தமனத்தை சிவப்பு நிறமாகவும் மாற்றும் அதே நிகழ்வு சந்திர கிரகணத்தின் போது சந்திரனை சிவப்பு நிறமாக மாற்றுகிறது. இது Rayleigh சிதறல் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது, ஏனெனில் சந்திரனை அடையும் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது.

இந்த கிரகணம் சந்திரன் உதிக்கும் நேரத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தெரியும், ஆனால் ஆரம்ப கட்டம் பகுதி மற்றும் முழு கிரகணம் இரண்டும் காணப்படாது, ஏனெனில் இரண்டு நிகழ்வுகளும் இந்தியாவில் எல்லா இடங்களிலும் நிலா அடிவானத்திற்கு கீழே இருக்கும்போது தொடங்கும் காரணத்தால் தென்படாது.

 

Continues below advertisement