கொலம்பியாவில் 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 


கொலம்பியாவில் கடந்த மே 1 ஆம் தேதி ஒற்றை எஞ்சின்  உடைய விமானமத்தில் 6 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானத்தில் 4 குழந்தைகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் விமானத்தில் இருக்கும் எஞ்சினில் பழுது ஏறபட்டுள்ளது. இதனால் விமானி அவசரநிலையை அறிவித்திருந்தார். அதன் பின் விமானம் வனப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்தது.


அமேசான் மழைக்காடுகளில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது. விமானத்தில் விமானி, 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பயணம் செய்தனர். எஞ்சினில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் - குழந்தைகளின் தாய், உறவினர் மற்றும் விமானி உயிரிழந்தனர். ஆனால் 4 குழந்தைகள் உயிருடன் இருந்துள்ளனர். விமான விபத்தைத் தொடர்ந்து அமேசான் மழைக்காடுகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, காணாமல் போன நான்கு குழந்தைகள், நேற்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.






இது தொடர்பாக அவர் பதிவிட்ட டிவிட்டரில், ” 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். 4 காணாமல் போன குழந்தைகள் 13, 9, 4, மற்றும் 11 வயது உடையவர்கள் ஆவர். 40 நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கிய இந்த குழந்தைகள் அமேசான் மழைக்காடுகளில் தனியே சுற்றி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் நேற்று மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.