எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு கால் திமிங்கல இனம் அழிந்துபோன ஒரு திமிங்கல வகையினை சேர்ந்தது. இது 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலத்தின் புதைபடிவங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த புதைவடிவம் எகிப்தின் மேற்கு பாலைவனப்பகுதிகளின் 'ஃபேம் டிப்ரஷனின்' ஈசீன் பாறைகளின் இடுக்கில் கிடைத்துள்ளது.


இந்த ஈசீன் பாறைகள் ஒரு காலத்தில் கடலால் மூடப்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. திமிங்கலங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இங்கே இதுவரை கிடைத்துள்ளன. ஃபியோமிசெட்டஸ் அனுபிஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய திமிங்கலம், மூன்று மீட்டர் (10 அடி) மற்றும் 600 கிலோ (1,300 பவுண்ட்) உடல் எடை கொண்டதாக ஆராய்ச்சியாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சிறந்த வேட்டையாடும் ரக திமிங்கலம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதன் எலும்புக்கூடு பகுதிகளை ஆராய்ந்ததில், ஆப்பிரிக்காவிலிருந்து உருவான மிகவும் பழமையான புரோட்டோசெடிட் வகை என்று தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.



இந்த சமீபத்திய கண்டுபிடிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால், இந்த நான்கு கால் திமிங்கலம் 43 மில்லியன் ஆண்டுகள் பழமையானது - இதனால் பரிணாம உயிரியலாளர்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான ஆலோசனையில் இருக்கின்றனர். 41.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவிற்கு வந்தன என்று அறிவியல் சமூகம் முன்பு நிறுவியிருந்தது.


"ஃபியோமிசெட்டஸ் அனுபிஸ் இதுவரை கண்டறியப்பட்ட திமிங்கல இனங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தது, எகிப்திய மற்றும் ஆப்பிரிக்க பழங்காலவியலுக்கான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு இது" என்று MUVP இன் அப்துல்லா கோஹர் கூறினார்.


இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் 'ஃபேம் டிப்ரஷனை' திமிங்கலத்தின் மரபணுப் பெயராக வைத்துள்ளனர். மற்றும் அதன் இனத்தின் பெயர் அனுபிஸ். அதற்கு அர்த்தம், பிரமிடுகளில் புதைக்கப்படும் மம்மி எனப்படும் நாகரிகத்தையும், எகிப்தின் பண்டைய கால வாழ்க்கையுடன் தொடர்புடைய நாய்-தலை கொண்ட எகிப்திய கடவுளான அனுபிஸைக் குறிக்கிறது.


சமீபத்தில் நிறைய புதைபடிவ கண்டுபிடிப்புகள் கிடைத்த போதிலும், ஆப்பிரிக்காவின் ஆரம்ப கால திமிங்கல பரிணாம வளர்ச்சியின் தெளிவான விளக்கம் இன்னமும் ஒரு மர்மமாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இப்போது அந்த துறையில் முழுமையான நீர்வாழ் திமிங்கலங்களின் பரிணாம வளர்ச்சியை தெளிவாக அறிந்துகொள்வதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.



சுமார் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பாறைகள் ஆன 'ஃபேம் டிப்ரஷனி'ல் உள்ள கண்டுபிடிப்புகளுள், பார்ப்பதற்கு பாதி முதலை போன்ற திமிங்கலங்கள் முதல் மாபெரும் நீர்வாழ் திமிங்கலங்கள் வரை அத்தனை பரிணாம வளர்ச்சி கொண்ட திமிங்கல வகைகளும் கிடைத்துள்ளன என்று எகிப்திய சுற்றுச்சூழல் விவகார முகமையின் முகமது சமே கூறினார்.


புதிய திமிங்கலம் பண்டைய கால சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது. எகிப்தில் பழங்கால திமிங்கலங்களின் தோற்றம், வளர்ச்சி மற்றும் வாழ்க்கை போன்ற கேள்விகளை நோக்கி இந்த ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று MUVP நிறுவனர் மற்றும் மற்றொரு இணை ஆசிரியரான ஹெஷாம் செல்லம் கூறினார்.


தற்போதைய உயிரியல் மத்திய ஈசீனின் போது புரோட்டோசெடிட் திமிங்கலங்களின் விநியோகத்தை சித்தரிக்கும் ஒரு எடுத்துக்காட்டு.


முடிவில், ஒட்டுமொத்த விஞ்ஞான சமூகமம் இந்த இனத்திற்கான தென் அமெரிக்க பதிவுகளைக் காண ஆர்வமாக உள்ளது மற்றும் திமிங்கல பரிணாமம் தொடர்பான வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதைக் காண ஆர்வமாக உள்ளன.