அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.


ஜாமினில் விடுவிப்பு:


2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் அவர் சிறையில் சரணடைந்தார். தொடர்ந்து, 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பிணைத்தொகையாக செலுத்தி ஜாமின் பெற்று நியூஜெர்சியில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.






ஜாமினில் விடுவிப்பு:


டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது நடப்பாண்டில் இது நான்காவது முறையாகும். ஆனால் சிறையில் நேரில் ஆஜராகி புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பிப்பது இதுவே முதல்முறையாகும். டிரம்ப் மட்டுமின்றி aவருடைய வழக்கறிஞர்கள் ரூடி கியுலியானி, சிட்னி பவல் மற்றும் அவரது முன்னாள் தலைமைத் தளபதி மார்க் மெடோஸ் உட்பட, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் நேரில் ஆஜராகி புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை சமர்பித்துள்ளனர்.


நடந்தது என்ன?


கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொன்ல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


20 ஆண்டுகள் சிறை?


குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் 25-ந் தேதிக்குள் (இன்று)  தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தான் ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் டொன்ல்டு டிரம்ப் சிறையில் சரண்டைந்தார். பின்பு ஜாமினில் சிறையில் இருந்து வெளியேறினார் இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் குடியரசு தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதும் கேள்விக்குறியாகி விடும்.