Pakistan: பாகிஸ்தான் உருவாகி 77 ஆண்டுகள் கடந்த நிலையில், காவல்துறையில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் உயர்பதவ் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
பாகிஸ்தானில் முதல்முறை..!
பாகிஸ்தான் நாட்ட்ன் வரலாற்றில் முதன்முறையாக இந்து பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியாகியுள்ளார். இந்த பெருமையை மனிஷா ரோபேட்டா என்பவர் பெற்றுள்ளார் . இவர் சிந்து காவல்துறையின் முதல் பெண் போலீஸ் அதிகாரி ஆவார். ரோபெட்டா 2021 இல் சிந்து பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பாகிஸ்தானில், ஒரு இந்து பெண் போலீஸ் அதிகாரியாவது மிகவும் கடினம் என கூறப்படும் நிலையில், அவர் இந்த நிலையை எட்டியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் நடிகை நிம்ரா கானை கடத்த முயன்ற வழக்கை ரோபெட்டா கையாண்டார் . காவல்துறை பணி பற்றி ரோபேட்டா பேசுகையில், " எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எனது கதையால் ஈர்க்கப்பட்டு நான் சென்ற பாதையைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன் " என தெரிவித்துள்ளார்.
ரெபெட்டா உயரதிகாரியானது எப்படி?
பாகிஸ்தானில் ஒரு இந்து போலீஸ் அதிகாரியாக வருவது மிகவும் கடினம் . இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனிஷா ரோபேட்டா போலீஸ் அதிகாரியாக வந்ததும், அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள போலீஸ் விதிகளின்படி, இந்து ஒருவர் போலீஸ் அதிகாரி ஆக முடியாதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் காவல்துறையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்ற கேள்விக்கான பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் போலீஸ் & ராணுவ ஆட்சேர்ப்பு விதிகள்?
பாகிஸ்தானில் போலீஸ் மற்றும் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு விதிகள் ஏறக்குறைய ஒன்றுதான் . அதன்படி, பாகிஸ்தானில் காவல்துறையில் பணிக்கு சேர, விண்ணப்பதாரர்கள் சில முக்கியமான தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக உடல் தகுதித் தேர்வு , எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவை உள்ளன. உடல் பரிசோதனையில் ஓட்டம் , உயரம் தாண்டுதல் மற்றும் பல சோதனைகள் அடங்கும். எழுத்துத் தேர்வில், பொது அறிவு , மனத்திறன் மற்றும் பகுத்தறியும் திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பதாரர்கள் பின்னர் காவல்துறை பயிற்சி அகாடமியில் சிறப்பு பயிற்சி பெறுகிறார்கள். அங்கு அவர்கள் சட்டம் , விசாரணை செயல்முறை மற்றும் கடமைகளில் பயிற்சி பெறுகிறார்கள் .
ராணுவ ஆட்சேர்ப்பு விதிகள்:
பாகிஸ்தான் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்ய, வேட்பாளர்கள் உடல் பரிசோதனை , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் செல்ல வேண்டும். ராணுவ ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 16 முதல் 23 ஆண்டுகள். இது தவிர, ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு உடல் ஆரோக்கியம் , உடல் திறன் மற்றும் மனதகுதி தேர்வுகளும் உள்ளன. மேலும், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்ய, விண்ணப்பதாரர்கள் பாகிஸ்தான் குடிமகனாக இருப்பது அவசியம். ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்ய அதிகாரிகள் , ஆணையிடப்படாத அதிகாரிகள் , வீரர்கள் என பல்வேறு வகையான பதவிகள் உள்ளன. மேலும் அனைவருக்கும் வெவ்வேறு தரநிலைகள் உள்ளன.
சிறுபான்மையினருக்கும் தனி விதிகள்:
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து , சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் வாய்ப்புகள் குறைவு. இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பொதுவாக ராணுவம் மற்றும் போலீஸ் படைகளில் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர். அதேநேரம், பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினரை அரசுப் பணிகளில் பங்கேற்க ஊக்குவித்துள்ளது. காவல்துறை மற்றும் இராணுவத்தில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் உள்ளன , அவை அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கின்றன. புத்தகத்தில் விதிகள் இருந்தாலும், அது ஒரு மதம்சார்ந்த நாடு என்பதாலேயே பிற மதத்தினர் அரசு பணிகளில் கோலோச்ச முடியவில்லை. முக்கிய பதவிகளையும் எட்ட முடியவில்லை.