இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கணயால் வெள்ளபாதிப்புகள் ஏற்பட்டு நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.


ஆண்டின் சராசரியில் பாதி மூன்றே நாளில் பெய்தது


இதுகுறித்து சிவில் பாதுகாப்பு மந்திரி நெல்லோ முசுமேசி பேசுகையில், "சில பகுதிகளில் ஒட்டுமொத்த ஆண்டின் சராசரி மழையளவில் பாதி, வெறும் 36 மணி நேரத்தில் பெய்து தீர்த்துள்ளது, இதனால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன, நகரங்கள் வழியாக நீர் பாய்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன," என்று கூறினார். இமோலாவில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான பல பகுதிகளுக்கு அருகில் அந்த இடம் இருப்பதால், அந்த பகுதிகளில் செய்யபட்டு வரும் அவசரகால மீட்பில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் அந்த போட்டி நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மோட்டார் பந்தய ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிக்கு வராமல் இருப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



உறிஞ்சும் திறனை இழந்த மண் 


"இதுவரை கண்டிராத பேரழிவு நிகழ்வுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்" என்று எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தின் தலைவர் ஸ்டெபானோ பொனாசினி செய்தியாளர்களிடம் கூறினார். "அசாதாரணமான அளவு மழை பெய்துவிட்டதால், அவற்றை உறிஞ்சும் திறன் மண்ணுகு இல்லை," என்று கூறினார். பழங்கால கிறிஸ்தவ பாரம்பரிய தளங்களுக்கு புகழ் பெற்ற அட்ரியாடிக் கடலோர நகரமான ரவென்னா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. உள்ளூர் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி, சுமார் 14,000 பேர் விரைவில் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றார். 37 நகரங்களை வெள்ளம் தாக்கியதாகவும், சுமார் 120 நிலச்சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொலோக்னா நகருக்கு அருகில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது, சில சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன மற்றும் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன என்று மேலும் தகவல்கள் வந்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்: Karnataka CM: 20ஆம் தேதி பதவியேற்கும் சித்தராமையா.. துணை முதல்வராக சிவக்குமார்: கை மாறுகிறதா முக்கிய இலாக்காக்கள்!


ஒன்பது உடல்கள் மீட்பு


ஒன்பது உடல்கள் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொனாசினி கூறினார். இப்பகுதியின் துணைத் தலைவர் ஐரீன் பிரியோலோ செய்தியாளர்களிடம் கூறுகையில், மழை குறைந்தாலும், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றார். சிவில் பாதுகாப்பு அமைச்சர் முசுமேசி, நிவாரண நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்க மே 23 அன்று கூடும் போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு 20 மில்லியன் யூரோக்களை ($22 மில்லியன்) ஒதுக்குமாறு அமைச்சரவையை கேட்டுக் கொள்வதாக கூறினார். அவசரகாலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரி மற்றும் அடமானக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.



இம்மாதத்தில் இரண்டாவது முறை 


இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக எமிலியா-ரோமக்னா கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மே மாத தொடக்கத்தில் ஏற்பட்ட புயலில் இரண்டு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக பெய்த மழையினால் நிலத்தின் தண்ணீரை உறிஞ்சும் திறன் குறைந்து, வெள்ளத்தின் தாக்கத்தை மோசமாக்குகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஃபென்சா, செசெனா மற்றும் ஃபோர்லியின் வரலாற்று மையங்கள் வழியாக வெள்ள நீர் பாய்ந்தது, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கூரைகள் வரை எட்டியது. ஒன்றரை நாளில் அங்கு சில பகுதிகளில் 200 மிமீ முதல் 500 மிமீ வரை மழை பெய்துள்ளதாக அமைச்சர் முசுமெசி கூறினார். அந்த பகுதியில் ஆண்டின் சராசரி மழை 1,000 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.