அமெரிக்காவின் சிகாகோவில் கடந்த சில தினங்களாக கடுமையகா பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சிகாகோ வீதிகளில் இருக்கும் பனியை அப்புறப்படுத்துவதில் சுமார் 270 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


அதேபோல் நெடுஞ்சாலையில் இருக்கும் பனியை அகற்ற 300 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல வாகனங்களை பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.


இந்நிலையில், பனிப்பொழிவு காரணமாக சீனா ஏர்லைன்ஸின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.




சீனாவுக்கு சொந்தமான C15240 சரக்கு விமானம் அந்த ஊர் நேரப்படி இன்று அதிகாலை 5.10 அலாஸ்காவின் ஆங்கரேஜில் இருந்து சிகாகோவில் தரையிறங்கியது. அப்போது கடுமையாக பனி பொழிந்துகொண்டிருந்தது.


தரையிறங்கியுவடன் விமானி விமானத்தை திருப்ப முயற்சி செய்ய, விமானத்தின் ஒரு பகுதி அங்கிருந்த பேக்கேஸ் கார்ட்டுகளின்மீது மோதியது.


 






நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதேசமயம், விமானத்தின் இடதுபுற எஞ்சின் ஒன்று மோசமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.




முன்னதாக கடும் பொனிப்பொழிவு காரணமாக சிகாகோ ரயில் தண்டவாளங்களில் பனி உறைந்து கிடந்தது. இதனையடுத்து, மெட்ரோ ஊழியர்கள் தீயை வைத்து உறைந்து கிடந்த பனியை உருக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்தக்கூடாது என கனடாவில் வலுக்கும் போராட்டம்.. ரகசிய இடத்திற்கு சென்றார் பிரதமர் ஜஸ்டின்!


Watch Video: சாலையில் விழுந்த இளைஞர் - நொடிப்பொழுதில் தப்பிய நிம்மதி.. பதைபதைக்கும் வீடியோ