காதல் என்பது மிக அழகிய உணர்வு. இந்த உணர்வு, 37 வயது பிரேசில் பெண்ணின் வாழ்க்கையையே மாற்றி போட்டுள்ளது. வீட்டிலேயே செய்த பொம்மையின் மீது காதலில் விழுந்த அவர், அதையே திருமணமும் செய்து கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்த தம்பதியருக்கு பொம்மை குழந்தையும் ஒன்று உள்ளது.
இந்த விசித்திர பெண்ணின் பெயர் மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ். பொம்மை கணவரின் பெயர் மார்செலோ. தனது மகளுடன் நடனமாட யாரும் இல்லை என்பதால் அவரின் தாயார் ரோச்சாவுக்கு பொம்மையை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து விவரித்த ரோச்சா மோரேஸ், "இதற்குக் காரணம் என்னுடன் நடனமாக நடனக் கலைஞர் இல்லை என்பதுதான். நான் இந்த நடன நிகழ்ச்சிகளுக்கு செல்வேன், ஆனால் எப்போதும் ஒரு துணையைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.
ரோச்சா மோரேஸின் வாழ்வில் மார்செலோ வந்த பிறகுதான், அது முழுமை பெற்றுள்ளது. நடன துணையாக மட்டுமின்றி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். தன்னுடைய திருமண வாழ்வு சிறப்பாக உள்ளது என சொல்லி ரோச்சா மோரேஸ் மகிழ்வடைகிறார்.
ஒரு ஆணிடம் எப்போதும் விரும்பும் குணங்கள் இந்த பொம்மையிடம் உள்ளது. தன்னுடன் வாதம் மேற்கொள்ளாமல் தன்னை புரிந்து கொள்வதால் பொம்மை கணவரை பிடித்திருப்பதாக ரோச்சா மோரேஸ் கூறுகிறார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "மார்செலோ ஒரு சிறந்த, உண்மையுள்ள கணவர். எல்லா பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அவர் ஒரு மனிதர்.
நான் திருமண நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் இறங்கிய தருணத்திலிருந்து இறுதிவரை அது மிகவும் அழகாக இருந்தது. பின்னர் எனது கணவர் மார்செலோவுடன் திருமண இரவுக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் திருமண இரவை மிகவும் ரசித்தோம்" என்றார்.
இந்த பொம்மை, பெண் தம்பதியினர் குடும்பத்திற்கு புதிய குடும்ப உறுப்பினராக பொம்மை குழந்தை வந்துள்ளது. அதாவது ஒரு குட்டி பொம்மையை குழந்தையாக கையில் வைத்துக்கொண்டு வாழத்தொடங்கியுள்ளார் அப்பெண்.