உலகப் புகழ் பெற்ற கால்பந்து போட்டியான ஃபிஃபா (FIFA ) உலக் கோப்பை போட்டியில் இந்தாண்டு முதல்முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்கிறார்கள்.கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனெல் மெஸ்ஸி ஆகிய இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் பங்கேற்கவிருக்கும் கடைசி உலகக்கோப்பைப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக்கு பல வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. போட்டிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தப்படுவது, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுவது என எல்லாம் புதிதானவை. அப்படியே, ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெண் நடுவர்கள் (refereed by a woman.) என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
வரும் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரேபிய நாடுகளில் உள்ள கத்தார் நகரத்தில் (Qatar World Cup ) போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். குறிப்பாக, இந்த முறை, போட்டிகள் கத்தார் நாட்டில் நடக்கிறது. பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில், ஆடவர் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராக பென்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு அளிக்கப்படும் இந்த அங்கீகாரம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஆண்கள் கால்பந்து போட்டிகளில் பெண் நடுவர்கள் பங்கேற்பது வழக்கமானது என்றாலும், ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் இத்தனைப் பெண்கள் நடுவர்களாகப் பணியாற்றவிருப்பது இதுவே முதல் முறை.
இதில் பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெஃபானி ஃப்ரப்பார்ட் (Stéphanie Frappart ), ருவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகான்ஸங்கா(Salima Mukansanga ), ஜப்பானைச் சேர்ந்த யோஷிமி யமாஷிடா (Yoshimi Yamashita) ஆகிய மூவரும் இந்தப் போட்டிகளில் நடுவர்களாகவும், பிரேசிலைச் சேர்ந்த நியூஸா பாக்(Neuza Back), மெக்ஸிகோவைச் சேர்ந்த டியாஸ் மெடினா(Karen Díaz Medina ), அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரீன் நெஸ்பிட் ( Kathryn Nesbitt) ஆகிய மூவரும் உதவி நடுவர்களாகக் களமிறங்குகிறார்கள்.
தரத்துக்கே முதலிடம் எனும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த நடுவர்கள் இப்போட்டியில் பங்கேற்பதாக ஃபிஃபா நடுவர்கள் கமிட்டியின் தலைவர் பியர்லூகி கோலினா கூறியிருக்கிறார்.
ஸ்டெஃபானி ஃப்ரப்பார்ட் (Stéphanie Frappart ), ருவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகான்ஸங்கா(Salima Mukansanga ),- இருவரும் தொடர்ந்து பல போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிஃபாவுக்கு வாழ்த்துகள்!