பிரதமர் மோடியின் அரசுமுறை பயணத்தின் நிறைவு நிகழ்வில், இந்தியாவின் தேசிய கீதமான ஜனகன மன பாடலைப் பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென், பாடிய பின் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார்.


மோடியின் பாதத்தை தொட்டு வணங்கிய அமெரிக்கா பாடகி 


வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடம் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் இந்தியன் கம்யூனிட்டி ஃபவுண்டேஷன் (யுஎஸ்ஐசிஎஃப்) நடத்திய நிகழ்வில் 38 வயதான எம்.எஸ் மில்பென் இந்திய தேசிய கீதத்தைப் பாடினார். பாடி முடித்த உடன் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து மரியாதை செய்தார்.


பிரபல ஆப்பிரிக்க-அமெரிக்க ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென், இந்தியாவில் தேசிய கீதமான ஜனகன மன மற்றும் ஓம் ஜெய் ஜகதிசே ஹரே ஆகியவற்றைப் பாடியதற்காக ஏற்கனவே பிரபலமானவர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, பிரதமர் மோடிக்காக இந்திய தேசிய கீதத்தை பாடுவது தனக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக மில்பென் கூறியிருந்தார்.



பெருமையாக கருதுகிறேன்


"தொடர்ந்து நான்கு அமெரிக்க அதிபர்களுக்கு முன்னும் நான் அமெரிக்க தேசிய கீதம் பாடியுள்ளேன். தற்போது இந்திய பிரதமர் மோடிக்காக இந்திய தேசிய கீதத்தை பாடியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன், மேலும் எனது குடும்பமாக கருதும் நாட்டிற்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்" என்று பாடகர் மில்பென் ஒரு அறிக்கையில் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Modi Biden Meeting: ”எதிர்காலம் நாம தான்” - பிரதமர் மோடிக்கு பைடன் தந்த சூப்பர் பரிசு..குஜராத்தில் களமிறங்கும் கூகுள் நிறுவனம்


அமெரிக்க-இந்தியா உறவின் சாராம்சம்


"அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்கள் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் லட்சியங்களைப் பற்றி பேசுகின்றன, இது அமெரிக்க-இந்தியா உறவின் உண்மையான சாராம்சம். சுதந்திரமான தேசம் என்பது சுதந்திரமான மக்களால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது," என்று அவர் கூறினார். பிரதமர் மோடியின் சக்திவாய்ந்த ஆன்மீக ஒளி மற்றும் இந்திய மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய தன்மை உலகம் முழுவதும் பெரிதும் மதிக்கப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.






மோடியின் காலில் விழும் கலாச்சாரம்


கடந்த மாதம், பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தபோது, பசிபிக் தீவுகளின் பிரதமர், இந்திய பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு மரியாதை செய்தார். அதே போல சமீபத்தில் அமெரிக்காவுக்கு செல்ல நாட்டை விட்டு மோடி வெளியேறும் போது ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்து பிரதமரின் முன் தலையை தரையில் தொட்டு வணங்குவது போன்ற காட்சிகள் விமான நிலையத்திலிருந்து காணப்பட்டன. பிரதமர் மோடி உடனடியாக கைகளை கூப்பி வணங்கி அவர்களுக்கு பதில் கொடுத்தார்.