மசாய் காடுகளில் மாரா பழங்குடியினர், ஒரு அரை நாடோடி, ஆடு மாடுகளை மேய்க்கும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களது பூர்வகுடிகள் தெற்கு கென்யா தொடங்கி தான்சானியா வரை நீண்டுள்ளது. மேய்ப்பர் பழங்குடி என்றாலும் மசாய் காடுகளின் சஃபாரி செல்லும் விருந்தினர்களுக்கு வழிகாட்டியாகவும் அப்படி வருபவர்களை கிராமங்களுக்கு அழைத்துச் செல்வது  தங்களது பண்பாட்டை அவர்களுக்கு காண்பிப்பது, இந்தப் பழங்குடியின ஆண்கள் கால்நடைகளை மேய்ப்பது; பெண்கள் தண்ணீர் அல்லது விறகு சுமந்து செல்வது ஆகிய பணிகளை செய்கின்றனர். 







மசாய் பழங்குடியினரின் பண்பாட்டில் கடவுள் தங்களுக்காகவே கால்நடைகளை உருவாக்கினார் என நம்புகின்றனர். மசாய்களைப் பொறுத்தவரைத் தங்களை உலகின் அனைத்து கால்நடைகளின் பாதுகாவலர்களாகக் கருதுகின்றனர். மசாய்களைப் பொறுத்தவரை மாடுகளை மேய்ப்பது சுற்றியே வாழ்க்கை நிலவுகிறது. பழங்குடிங்களின் முதன்மையான வாழ்வாதாரமாக அவை நிலவுகிறது. 



சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட வாழ்வாதார முறையைதான் நூற்றுக்கணக்கான அண்டுகளாக மசாய் பழங்குடிகள் பின்பற்றி வருகின்றனர். முக்கியமாக தாங்கள் மேய்க்கும் மந்தைகளின் மேய்ச்சல் காடுகளில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் பள்ளத்தாக்குகளில் அவற்றை மேய்க்கின்றனர். 


கடந்த பல ஆண்டுகளில் சிங்கத்தை வேட்டையாடுவதைத் தங்களது போர்க்குணமாகவும் அதனைத் தங்களது சடங்காகவும் இந்த மசாய் பழங்குடி இளைஞர்கள் பார்த்தார்கள். இரும்பு ஈட்டிகளை ஆயுதமாகப் பயன்படுத்தி தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ சென்று சிங்கத்தை வேட்டையாடினார்கள். ஆனால் கிழக்கு ஆப்பிரிக்க அரசாங்கம் சிங்கத்தை வேட்டையாடக் கூடாது எனத் தடை விதித்ததை அடுத்து தங்களத்டு மந்தைகளை சிங்கம் தாக்கினால் மட்டும் அவற்றை வேட்டையாடுவதை மசாய்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் மற்றபடி அவர்கள் சிங்கத்தைக் கொல்லுவதில்லை.