20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அந்நாட்டில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வருவதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனார். இதனால், முழு நாட்டையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள காரணத்தால், நாட்டு மக்களும், அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பதற்ற சூழல் நிலவி வருவதால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனால், காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். தினம் தினம், மனதை பதைபதைக்க வைக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பயங்கரவாதிகள் என்கிற அடிப்படையில் தலிபான்கள் பயன்படுத்திய பேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் கடந்த இரு தினங்களாக முடிக்கி வருகிறது. தலிபான்கள் மட்டுமல்லாது, தலிபான்களுக்கு ஆதரவான பதிவிடுவோரின் பேஸ்புக் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலிபான்களின் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டா கணக்குகளும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் மட்டுமல்லாது, தலிபான்களின் ஆதரவாளர்களுக்கும் இந்த கணக்கு முடக்கம் பொருந்தும்.
பேஸ் புக் அறிவிப்பின் பின்னணி இதோ!
பேஸ்புக் நிறுவனம் சில காரணங்களை சுட்டிக்காட்டி தான் தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கியது. பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வரும் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைக்கு பேஸ்புக்கின் விதிகளும் பொருந்தும். எனவே எந்தகாரணத்திற்காக பேஸ்புக் இணைப்பு முடக்கப்பட்டதோ, அதே காரணத்திற்காக பேஸ்புக்கின் துணை நிறுவனங்களான வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்ட்ராவில் கணக்கு வைத்துள்ள தலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கணக்குகளும் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் தலிபான்களின் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.