எலான் மஸ்க் தொடர்ந்து டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த 12 மணி நேரமாக அவர் வெளியிட்டு வரும் பதிவுகள், ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமே இல்லாத வகையில் வித்தியாசமாக உள்ளன.


எலான் மஸ்க் டிவீட்கள்:


முதலாவதாக, எலி பொறிகள் இருக்கின்றன ஆனால் முன்பு இருந்த எலி வலைகள் என  ஒரு பெண்ணின் படத்தை குறிப்பிடும் மீம்ஸை ஷேர் செய்துள்ளார். அதைதொடர்ந்து, எலியை பிடிப்பதற்காக எளிய யோசனை என்பது போன்ற ஒரு மீம்ஸை பதிவிட்டுள்ளார். பணவீக்கத்தை தோற்கடிப்பது அல்லது ஆங்கிலேயர்களை தோற்கடிப்பது இவற்றில் எது கடினமானது என கேள்வி எழுப்பியுள்ளார்.  ”Roth IRA vs Wrath IRA” என குறிப்பிட்டு, பணவீக்கம் குறைப்புச் சட்டம் vs அயர்லந்து குடியரசு ராணுவம் ரெண்டுமே ஒன்று தான் என குறிப்பிடும் வகையில் ஸ்பைடர் மேன் மீமை பகிர்ந்துள்ளார்.  மூன்றாம் உலகப்போர் தொடர்பான மீம்ஸ்களை கண்டு சிரிப்பதையும், கவலை கொள்வதையும் ஒரே நேரத்தில் செய்வதை போன்ற மீம்ஸை பகிர்வதோடு, கழிவறைக்குள் செல்லும்போது செல்போனை மறந்துவிட்டால் உள்ளே நாம் என்ன செய்வோம் என்பது போன்ற மீம்ஸையும் குறிப்பிட்டுள்ளர். வீடியோ கேம் தொடர்பாகவும், ஏன் பணவீக்கத்தை சூனியத்தால் தோற்கடிக்க முடியவில்லை, ஐன்ஸ்டீனின் ஆற்றல் கோட்பாட்டை கிண்டலடிப்பது, பனிக்கரடி காமெடி, ஸ்டெப் பிரதர்ஸ் திரைப்படத்தை மீண்டும் பார்த்தேன் அது நன்றாக இருந்தது என, ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் பல்வேறு கருத்துகளையும், மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளார்.


என்ன தான் ஆச்சு மஸ்கிற்கு?


எலான் மஸ்கின் இந்த செயல் நெட்டிசன்களை குழப்பமடைய செய்துள்ளது. அதோடு அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. பயனாளர்கள் பலர் உங்களுக்கு மூளை ஏதேனும் குழம்பிவிட்டதா, எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர், உங்களுக்கு என்ன பிரச்னை என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒருவேளை மறைமுகமாக ஏதாவது செய்தியை எங்களுக்கு சொல்ல முயற்சி செய்கிறீர்களா எனவும், டிவிட்டர் பயனாளிகள் பலர் எலான் மஸ்கை டேக் செய்தும், கருத்துரை பகுதிகளிலும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அவர் ஒரு பிளே பாய் (விளையாட்டுப் பிள்ளை), வழக்கமாக இப்படி தான் நகைச்சுவையாக எதையாவது செய்வார் என விளக்கமளிக்கின்றனர்.


டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்:


டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் தொடர்ந்து, தனது டிவிட்டர் பக்கத்தில் தான் வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே பல்வேறு முக்கிய நபர்களும், பிரமுகர்களும் எலான் மஸ்கை பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், தற்போது அவர் செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.